தமிழ்நாட்டில் 66 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பு! அதில் 29 லட்சம் பேர் இளைஞர்கள்! என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 66 லட்சத்தை கடந்துள்ளது.
அரசாங்க உத்யோகத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும் என பலரும் நினைப்பதே இந்த எண்ணிக்கை விறுவிறுவென உயர்வதற்கு காரணமாகும்.
கடந்த ஏப்ரல் 30 ஆம்தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவுதாரர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 ஆக உள்ளது.

இதில், ஆண்கள் எண்ணிக்கை என்று எடுத்துக்கொண்டால் 31 லட்சத்து 7 ஆயிரத்து 600 பேர், அதே போல் பெண்கள் எண்ணிக்கை என்று எடுத்துக் கொண்டால் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 பேர் ஆவார்கள்.
மேலும் இவர்களை தவிர்த்து மூன்றாம் பாலினத்தவர் 266 பேர் உள்ளனர். இதனிடையே வேலைக்காக காத்திருப்போரை வயது வாரியாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டும் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 பேர். பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் பதிவு செய்ததன் அடிப்படையில் இந்தக் கணக்கீடு.

19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தாரை 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 ஆக உள்ளது. கல்லூரிப் பட்டப்படிப்பை பதிவு செய்ததன் அடிப்படையில் இந்தக் கணக்கீடு.
அதேபோல் 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 32 ஆயிரத்து 990 பேர். 46 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6 ஆயிரத்து 111 பேர் உள்ளனர்.
இந்தாண்டு கல்லூரி படிப்பை முடித்தவர்கள், பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் நாட்களில் வேலைவாய்ப்பு முகாம்களில் பதிவு செய்வார்கள் என்பதால், வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications