பெல் நிறுவனத்தில் வேலை.. 680 பணியிடங்கள்.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. ரெடியா
திருச்சி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 680 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களைபார்க்கலாம்.
பெல் என்று அழைக்கப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் திருச்சியில் இயங்கி வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதில், 680 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்

பணியிடங்கள் விவரம்: பட்டதாரி அப்ரண்டீஸ் (பயிற்சி) 179, டெக்னிஷியன் அப்ரண்டீஸ்- 398, டிரேட் அப்ரண்டீஸ்: 103 என மொத்தம் 680 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டெக்னிஷியன் அப்ரண்டீஸ் பணிகளில், ஏசி மெக்கானிக், கார்பெண்டர், எலக்டிரிஷியன், பிட்டர், மேசன், மோட்டார் மெக்கானிக், பிளம்பர் வெல்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
அதேபோல், பட்டதாரி பயிற்சி பணிகளில் அக்கவுண்டண்ட், சிவில் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இது குறித்த முழு விவரங்களை விண்ணப்ப அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை துறை சார்ந்த கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது. அதாவது, பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். பணியிடங்களுக்கு ஏற்ற துறையில் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.
பொது பிரிவினர், ஒபிசி ஆகியோர் 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னிஷியன் பணியிடங்களுக்கு டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். 70 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு பெற்று இருக்க வேண்டும். 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
சம்பளம் எவ்வளவு: ஊதியத்தை பொறுத்தவரை இது முற்றிலும் ஒரு ஆண்டு ஒப்பந்த பணியாகும். பட்டதாரி அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.9 ஆயிரமும், டெக்னிஷியன் அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.8 ஆயிரமும், டிரேட் அப்ரண்டீஸ் பணிக்கு ரூ.7,700- 8,050ம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 01.12.2023 ஆகும். மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப அறிவிப்பை படிக்க https://trichy.bhel.com/tms/app_pro/Trade_App.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications