ரூ 2 கோடி சம்பளத்தில் வேலை.. ஆனாலும் மிரளும் மக்கள்.. நடுக்கடலில் கப்பல தள்ளுற வேலையா இருக்குமோ?
பெய்ஜிங்: இலவச உணவுடன் ரூ 2 கோடி சம்பளம் கொடுத்தாலும் சீனாவில் பெண்கள் வேலைக்கு செல்ல தயங்குகிறார்களாம். அப்படி என்ன வேலை தெரியுமா?
இந்த காலத்தில் படித்தவர்களுக்கு அவர்களுக்கு தகுந்த வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அதிலும் நல்ல சம்பளத்திற்கு கிடைப்பது என்பது கைக்கு எட்டாத தூரத்தில்தான் இருக்கிறது.
இவை இரண்டுமே கிடைத்தால் அதை தக்க வைத்துக் கொள்வது என்பது சிறிய நூலால் மலையை கட்டி இழுப்பது போன்று உள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் சீனாவில் ரூ 2 கோடி சம்பளம் கொடுத்தாலும் அந்த வேலைக்கு செல்ல பலர் யோசிக்கிறார்கள்.

சேதுபதி ஐபிஎஸ் படத்தில் கப்பலில் வேலை வாங்கித் தருவதாக செந்தில், கவுண்டமணியிடம் சொல்வார். ஒரு கட்டத்தில் அந்த வேலை கஷ்டம், அதனால் நான் போகவில்லை என்பார் செந்தில். அது எத்தனை பெரிய கஷ்டமாக இருந்தாலும் நான் செய்கிறேன் என கவுண்டமணி மன்றாடுவார். அதற்கு செந்தில் கப்பலில் என்ஜின் ஸ்டார்ட் ஆகி நடுக்கடலில் போகும்.
அப்போது என்ஜினில் கோளாறு ஏற்பட்டு அதுவாகவே சரியானால் சரி, இல்லாவிட்டால் இறங்கி தள்ள வேண்டும் என்றார். அதற்கு கவுண்டமணி அதிர்ச்சியாக பார்த்துவிட்டு நான் நடுக்கடலில் இறங்கி கப்பலை தள்ளினால், என் சம்பளத்தை யார் வாங்குவது என கேட்பார். அதற்கு செந்தில் நாந்தாண்ணே என்பார். அதுபோல் இது கஷ்டமான வேலையா என்று தெரியவில்லை.
அப்படி என்ன வேலை என்பதை பார்ப்போம். சவுத் சைனா மார்னிங் போஸ்டில் வந்த செய்தியின் படி இந்த வேலை சீனாவில் இருக்கிறது. ஷாங்காய் நகரத்தில் வசிக்கும் ஒரு பெண் தனக்கென ஒரு பணிப்பெண்ணை தேடுகிறார். அவர் 24 மணி நேரமும் தன்னை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பணிக்காக 16 லட்சத்திற்கு மேல் சம்பளம் வழங்கப்படும்.
இந்த வேலைக்கான விளம்பரம் செய்தித்தாளில் கொடுக்கப்பட்டது. அதன்படி அந்த பணிப்பெண்ணுக்கு மாதத்திற்கு ரூ 16.44 லட்சம் ஊதியம் என்றால் ஆண்டுக்கு ரூ 1.97 கோடி வழங்கப்படும். தன்னை பார்த்துக் கொள்ள வரும் பணிப்பெண் 165 செ.மீ. உயரமும் எடை 55 கிலோவுக்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். அவர் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். தோற்றத்தில் சுத்தமாக இருக்க வேண்டும்.

ஆடவும் பாடவும் தெரிந்திருக்க வேண்டும். ஹவுஸ் கீப்பிங் சர்வீஸ் கொடுத்துள்ள விளம்பரம் விவாதத்தை கிளப்பியுள்ளது. பணிப்பெண் தேடும் அந்த மூதாட்டிக்கு ஏற்கெனவே தலா 2 பணிப்பெண்கள் தலா 12 மணி நேரம் என்ற ஷிப்டில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு அதே ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த பணியில் அந்த மூதாட்டியின் காலில் இருக்கும் காலணியை கழற்றி அவரை படுக்கையில் படுக்க வைக்க வேண்டும்.
அவர் எழுந்து நடக்கும் போது அந்த காலணியை காலில் மாட்டிவிட வேண்டும். ஜூஸ், பழம், தண்ணீர் என எப்போது கேட்டாலும் முதலில் கொடுத்துவிட வேண்டும். அவர் வரும் வரை வாசலில் காத்திருக்க வேண்டும். அவர் கை அசைத்தவுடன் உள்ளே போய் ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டுமாம். இப்படிப்பட்ட கண்டிஷன்கள் உள்ளதால் வேலைக்கு செல்லவே தயங்குகிறார்கள்.












Click it and Unblock the Notifications