சிஏ தேர்வில் வென்றதை சொன்ன மகன்.. கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்த காய்கறி வியாபாரியான தாய்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காய்கறி விற்பவரின் மகன் சிஏ தேர்வில் வென்றுள்ளார். மகன் சிஏ தேர்வில் வென்று ஆடிட்டர் ஆனதை கேட்டு ஆனந்தத்தில மகனை காய்கறி வியாபாரியான தாய் கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் விட்டார். அப்போது அவர் அளித்த பரிசும், தாயின் அன்பும் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
கல்வி தான் இந்த உலகத்தில் ஆகச்சிறந்த சொத்து என்பதை பல ஏழை பெற்றோர் உணர்ந்து வருகிறார்கள். தாங்கள் பட்ட கஷ்டத்தை தன் பிள்ளைகள் படக்கூடாது என்பதற்காக சிறப்பான உயர்கல்வியை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார்கள். எவ்வளவு தான் பணம் சம்பாதிக்க முடியும் என்றாலும், கல்வி என்பது குறிப்பிட்ட வயதில் தான் கற்க முடியும். அந்த வயதில் கற்காமல் விட்டால், பின்னாளில் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இளம் வயதில் பெண் குழந்தைகளை சரியாக படிக்க வைக்காமல் திருமணம் செய்வது வைப்பதால் பல குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன. அந்த குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக் குறியாகிறது. நன்றாக படித்து நல்ல நிலைக்கு பெண் குழந்தைகள் வந்தால் மிகப்பெரிய மாற்றம் வரும் என்பதை உணர்ந்த அரசுகள் அவர்களுக்காக சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இதேபோல் ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவி தொகை அளிப்பது, இலவச கல்வி அளிப்பது என பல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் எந்த மாநிலம் என்றாலும் கல்விக்கே அதிகம் முக்கியத்துவம் தருகின்றன. ஏனெனில் வறுமையை விரட்ட கல்வியைவிட சிறந்த ஆயுதம் எதுவுமே இல்லை. அதை பல ஏழைக்குழந்தைகள் ஐஏஏஸ், ஐபிஎஸ், ஐபிஎஸ், ரயில்வே அதிகாரி, தபால் அதிகாரி என சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வென்று நிரூபித்துள்ளனர்.
இதேபோல் பலர் சாப்ட்வேர் என்ஜினியர்களாக மாறி முதல் தலைமுறையிலேயே கோடீஸ்வரர்களாக மாறி உள்ளனர். பல ஏழைக் குழந்தைகள் சிஏ உள்ளிட்ட கடினமான தேர்வுகளில் வென்று மிகப்பெரிய உயரத்தை அடைந்து வருகிறார்கள். அப்படித்தான் மகாராஷ்டிராவில் காய்கறி விற்கும் பெண்ணின் மகன், சிஏ தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் டோம்பிவிலி அருகே கோனி என்ற கிராமத்தில் தனது நீரா தோம்பரே என்ற மகன் யோகேஷ் உடன் வசித்து வருகிறார். நீரா தோம்பரே கடந்த 25 ஆண்டுகளாக டோம்பிவிலி காந்திநகர் பகுதியில் காய்கறிகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
சிறுவயதில் இருந்தே தனது தாய்க்கு காய்கறி வியாபாரத்தில் உதவியாக இருந்த யோகேஷ், நன்கு படித்தார்.
வறுமையை வெல்ல படிப்பு தான் சிறந்த ஆயுதம் என்பதை உயர்ந்த யோகேஷ் சிறப்பாக படித்து முடித்தார். மகனை படிக்க வைக்க காய்கறி வியாபாரியான நீரா தோம்பரே கடுமையாக உழைத்தார். பள்ளிக்கல்வியை முடித்த யோகேஷ் சிஏ தேர்வு எழுத முடிவு செய்தார். இதற்காக மனஉறுதியுடனும் கடின உழைப்புடனும் படித்தார். அவர் சிஏ தேர்வில் வென்றார்.
தான் சிஏ தேர்வில் வென்றதை யோகேஷ், நேராக தனது தாயின் காய்கறி கடைக்குச் சென்று தனது சாதனையைப் பற்றி கூறினார். சிஏ தேர்வில் வென்றதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகனை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அப்போது மகன் யோகேஷ் தனது தாய்க்கு பரிசாக புடவையை வழங்கினார்.
அப்போது "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்ற திருக்குறளில் கூறியது போல், மகனை பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சியைவிட சிறந்த மகிழ்ச்சியதாக இது அந்த தாய்க்கு இருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை டேக் செய்த மஹாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான், வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதன்பின்னரே பலருக்கும் வீடியோ பரவியது. அமைச்சர் ரவீந்திர சவான் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "உங்களைப் பார்த்து பெருமைப்படுகிறேன், யோகேஷ். உறுதியுடனும் கடின உழைப்புடனும், கடினமான சூழ்நிலையிலும் இந்த அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளீர்கள்" என்று கூறியுள்ளார். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸும் யோகேஷின் வீடியோவைப் பகிர்ந்து, அவரது பெரிய சாதனைக்காக அவரை வாழ்த்தி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications