ஆதார் மையத்தில் சூப்பர்வைசர் வேலை.. தமிழ்நாட்டிலும் பணியிடம் இருக்கு! செம சான்ஸ்
சென்னை: ஆதார் மைய அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் சூப்பர்வைசர், ஆபரேட்டர் என 282 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழகத்திலும் காலிப்பணியிடங்கள் உள்ளன. 10, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
ஆதார் அடையாள அட்டை இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் பதிவுக்காக நாடு முழுவதும் ஆதார் மையங்கள் இயங்கி வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் ஆதார் மையத்தின் நேரடி அலுவலகங்கள் உள்ளன. CSC e Governance - india limited என்ற அரசுசார் நிறுவனம் இதை இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனம் செயல்படுத்தும் ஆதார் மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
ஆதார் சூப்பர்வைசர் / ஆபரேட்டர்: 282 பணியிடங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தில் 28, உத்தர பிரதேசம், 23, மகாராஷ்டிரா 20, பஞ்சாப் 12, தெலுங்கானா- 11, கேரளா - 11, கர்நாடகா-10, தமிழ்நாடு- 03, புதுவை 01, ராஜஸ்தான் 04, குஜராத் 06, என மொத்தம் 282 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களுக்கு ஏற்ற அனுபவமும் அவசியம். அதாவது, மத்திய அரசின் ஆதார் ஆபரேட்டர் / சூப்பர்வைசர் சான்றிதழ் அவசியம்.
வயது வரம்பு:
30.01.2026ன் படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cscspv.in/
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications