சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்க்க விருப்பமா? 396 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமாக உள்ள AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 396 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.

ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா எனப்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமாக உள்ள AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 396 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

aaiclas-recruitment-2025-396-security-screener-posts-announced-vacancies-in-chennai

பணியிடங்கள் விவரம்:

1. செக்யூரிட்டி ஸ்கீரினர் -230 பணியிடங்கள்
2. அஸ்சிஸ்டண்ட் (செக்யூரிட்டி)- 166 என மொத்தம் 396 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் செக்யூரிட்டி ஸ்கீரினர் பணியிடமானது அமிர்தசரஸ் - 35,
வதோரா: 16, சென்னை: 176 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி:

* செக்யூரிட்டி ஸ்கீரினர் எனப்படும் பாதுகாப்பு சோதனை மேற்கொள்பவர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருந்தால் போதும். குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அவசியம். ஆங்கிலம் பேச எழுத தெரிந்து இருக்க வேண்டும். இந்தி அல்லது உள்ளூர் மொழி தெரிந்து இருப்பது அவசியம்.

* அஸ்சிஸ்டண்ட் (செக்யூரிட்டி) பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும் /ஆங்கிலம், இந்தி மற்றும் / அல்லது உள்ளூர் மொழியைப் படிக்க / பேசத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

01.06.2025 தேதிப்படி விண்ணப்பதாரர்கள் 27 - வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்சி/எஸ்.டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுக்ளும் தளர்வுகள் அளிக்கப்படும். பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம் எவ்வளவு?

* செக்யூரிட்டி ஸ்கீரினர்: ரூ. 30 ஆயிரம் முதல் 34 ஆயிரம் வரை.
* உதவியாளர் (செக்யூரிட்டி): ரூ.21,500 முதல் 22,500 வரை.

இந்த பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானது. மூன்று ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.

தேர்வு முறை:

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பெண்கள் ஆகியோருக்கு கட்டணம் ரூ.100 ஆகும். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்க கூடிய அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து முழு தகவல்களையும் தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.aaiclas.aero/uploads/career/AAICLAS5391749018421.pdf

விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 09.06.2025 ஆகும்.
விண்ணப்பிக்க அவகாசம் முடியும் நாள்: 30.06.2025 ஆகும்.

ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் வழியாக விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+