நோ எக்ஸாம்.. திருப்பூர் ஆவினில் சூப்பர் வேலை.. மாதஊதியம் ரூ.43,000.. நேர்க்காணல் மட்டுமே.. ரெடியா?
திருப்பூர்: தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள ஆவின் பணியிடங்கள் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் எக்ஸாம் இன்றி மாதம் ரூ.43 ஆயிரம் ஊதியத்தில் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்று ஆவின். இது தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்டம் வாரியாக நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட ஆவினில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட்டில் காலியாக உள்ள வெட்னரி கன்சல்டன்ஸ் (கால்நடை ஆலோசகர்) பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc. & A.H) அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு, கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Individual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்வோர் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது ஏப்ரல் 27ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

இந்த பணிக்கு எழுத்து தேர்வு எதுவும் இல்லை. நேர்க்காணல் மட்டுமே உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணல் ஏப்ரல் 27 ம் தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் மில்க் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர் -641 605 என்ற முகவரியில் நடக்கும் நேர்க்காணலில் பங்கேற்கலாம். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications