ரெடியா? நேர்க்காணல் மட்டுமே.. மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளம்.. ஆவினில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு..
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் செயல்பட்டு வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டில் ஆவினில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேர்க்காணல் முறையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 24ம் தேதி நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.43 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஆவின் செயல்பட்டு வருகிறது. ஆவினில் காலியாக உள்ள பணியிடங்கள் மாவட்ட வாரியாக அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது 2 மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
ஆவினில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யூனியன் லிமிடெட், வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி யூனியன் லிமிடெட் ஆகியவற்றில் தலா 5 வெட்னரி கன்சல்டன்ட்(கால்நடை ஆலோசகர்) பணிகள் காலியாக உள்ளன. அதன்படி 2 மாவட்டங்களிலும் மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மேலும் Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indiviual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். இருப்பினும் இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் இளங்கலை வெட்னரி சயின்ஸ் & அனிமல் ஹஸ்பன்ட்ரி படிப்பை (B.V.Sc.,& A) முடித்திருப்பதோடு, கம்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் டூவீலர் ஓட்ட தெரிந்து லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்.
விருப்பம் மற்றும் தகுதி உள்ளவர்கள் நேரடியாக வரும் 24ம் தேதி நடக்கும் காலை 11 மணிக்கு நடக்கும் நேர்க்காணலில் நேரடியாக பங்கேற்கலாம். நேர்க்காணலில் பங்கேற்பவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள், பயோடேட்டாவுடன் செல்ல வேண்டும்.
தஞ்சாவூரில் பணி பெற விரும்பினால் Thanjavur District Cooperative Milk Produces Uniove Ltd, Thanjavur - 6 என்ற முகவரியிலும், வேலூர் மாவட்டத்தில் பணி பெற விரும்பினால் Administrative Office, Vellore DCMPU Ltd., (Aavin), Sathuvachari, Vellore - 9 என்ற முகவரியிலும் நேர்க்காணலில் பங்கேற்கலாம்.
தஞ்சாவூர் பணி தொடர்பான அறிவிப்பை காண Click Here
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications