Accenture-ல் வேலைவாய்ப்பு.. சென்னை, கோவையிலேயே பணி.. டிகிரி மட்டுமே போதும்! மிஸ் பண்ணாதீங்க
சென்னை: இந்தியாவில் இயங்கி வரும் பிரபல ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஆக்சென்ச்சர்-ல் (Accenture) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் சென்னையிலும் கோவையிலும் பணியை பெற முடியும். அதோடு தொடக்கத்தில் மாதசம்பளமாக ரூ.38 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முன்னனி ஐடி நிறுவனங்களில் ஒன்று அக்சென்ச்சர் (Accenture). சென்னை, கோவை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அக்சென்ச்சர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

காலியிடம்: ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் (System And Application Services Associate) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எத்தனை பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
கல்வி தகுதி: சிஸ்டம் அண்ட் அப்ளிகேஷன் சர்வீசஸ் அசோசியேட் பணிக்கு பிஎஸ்சி, பிசிஏ, பிபிஏ, பிஏ, பிகாம், பி.வாக் (B.Voc), பிஎம்எஸ், பிபிஎஸ், பிஎப்எம், பிபிஐஐ, பிஏஎப், பிஎட், பிஎம்மெ், பிஎப்ஏ, பிஎஸ்மைக், பி.டிசைன், எம்சிம், எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி தவிர), எம்ஏ, எம்காம், எம்எப்ஏ படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த படிப்புகளை கல்லூரி சென்று முழுநேரமாக முடித்திருக்க வேண்டும். பார்ட் டைம் முறையில் படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது. 2023ல் படிப்பை முடித்தவர்கள், 2024ல் படிப்பை முடிப்பவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட பிரிவுகளி்ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய முடியாது.
மாத சம்பளம்: அப்ளிகேஷன் டெவலப்மென்ட் அசோசியேட்ஸ் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3,44,200 சம்பளமாக வழங்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் தொடக்கத்திலேயே மாதம் ரூ.28,683 சம்பளமாக வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம் எங்கு: பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை பெங்களூர், ஹைதராபாத், மும்பை, புனே, குர்கிராம், கொல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: விண்ணப்பத்துக்கான கடைசி தேதி என்று எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் Accenture நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான கூடுதல் விபரம் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications