ஐடி துறை மேனேஜர்களை.. தேடி வரும் சூறாவளி புயல்.. காற்றில் பறக்க போகும் வேலை.. கவனமாக இருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை தற்போது ஒரு பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்பு டெவலப்பர்கள் மற்றும் டெஸ்டர்களை மட்டுமே பாதித்த வேலை இழப்புகள், இப்போது மூத்த மற்றும் நடுத்தர மேனேஜர்களுக்கும் பரவியுள்ளன. பலரின் மேனேஜர் பதவிகள் பறிபோக தொடங்கி உள்ளன.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்குமயமாக்கல் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முதன்மைக் காரணமாகும். இது தொழில்நுட்பத் துறையில் புதிய சவால்களை உருவாக்கியுள்ளது.

job jobs

செயற்கை நுண்ணறிவு (AI) காரணமாக பல அறிவாளிகள், சாமர்த்தியமானவர்கள் வேலையை இழக்க நேரிடும்.. மேனேஜர் பொறுப்புகள் அவசியம் இல்லாமல் போகும் ஐடி துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். AI தொழில்நுட்பம், ஒரு காலத்தில் சிறப்பானதாக, பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பல வேலைகளை தானியங்கி மயமாக்குவதால் வேலையின்மை அதிகரிக்கும்.

ஏஐ காரணமாக அதிகரிக்கும் வேலை இழப்பு

பிரபல தனியார் தொழில் ஆராய்ச்சி, முதலீட்டு நிறுவனமான சிக்னல்ஃபயர் நிறுவனம் ஏஐ காரணமாக உலகம் முழுக்க பணி இழப்பு அதிகரித்து உள்ளதாகவும், புதிய பணி சேர்ப்புகள் கடுமையாக சரிந்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்னல்ஃபயர் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்க நிலை பணியமர்த்தல் 2019 முதல் 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. முன்னதாக, இந்த நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் புதிய பட்டதாரிகள் சுமார் 15 சதவீதமாக இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது வெறும் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனத்தின் புதிய கோடிங்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இப்போது AIதான் எழுதுகிறது. இதனால் வரும் காலங்களில் ஏஐ வழியாக வரக்கூடிய வேலை வாய்ப்புகள் மிக கடுமையான சரிவை சந்திக்கும்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பில், பணியமர்த்தல் சமயங்களில் HRகளில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் AI அனுபவமுள்ள நபர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். நான்கில் ஒரு நபருக்கு இப்போது AI திறன் தேவையாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இந்திய ஐடி துறையில் பணிநீக்கம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்ட அறிவிப்பு இதை உறுதிப்படுத்துகிறது. நிறுவனம் தனது 2% ஊழியர்களை, அதாவது சுமார் 12,000 பேரை பணிநீக்கம் செய்கிறது. இந்த பணிநீக்கங்களில் பெரும்பாலானோர் நடுத்தர, மூத்த நிலைகளில் உள்ள மேனேஜர்கள் எனத் தெரியவந்துள்ளது.

2023 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடையில், சுமார் 25,000 வேலைகள் மறைமுகமாக நீக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 50,000ஐ தாண்டலாம் என்றும் கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு எதிர்காலம்

இந்திய ஐடி சேவைத் துறையின் பாரம்பரிய அமைப்பு மாறிவிட்டது. புதிய பணியாளர்கள், இளநிலை குறியீட்டாளர்கள், பல அடுக்கு மேலாளர்கள் கொண்ட குழுக்கள் குறைந்துவிட்டன. பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேஷன் காரணமாக.. அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை தொடக்கத்தில் நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அடிப்படையில், ஒரு காலத்தில் மனிதர்களால் கையாளப்பட்ட வேலையை இப்போது AI செய்வதால், பல பணிகள் மெதுவாக நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி, தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம் ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

மேனேஜர்கள் பணி நீக்கம்

முக்கியமாக முன்பு டெவலப்பர்கள் மற்றும் டெஸ்டர்களை மட்டுமே பாதித்த வேலை இழப்புகள், இப்போது மூத்த மற்றும் நடுத்தர மேனேஜர்களுக்கும் பரவியுள்ளன. பலரின் மேனேஜர் பதவிகள் பறிபோக தொடங்கி உள்ளன.

ஆழமான தொழில்நுட்பத் திறன்கள் இல்லாத நிர்வாகப் பதவிகள் இனி பாதுகாப்பானவை அல்ல. செயற்கை நுண்ணறிவு கருவிகள் அறிக்கை தயாரித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற வழக்கமான பணிகளை மேற்கொள்ளத் தொடங்குவதால், பல நடுத்தர மேனேஜர்கள் பணிகளை இழக்க நேரிடும், என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+