ஏஐ உங்க வேலையை இப்படித்தான் எடுத்துக்க போகுது.. வந்தது எச்சரிக்கை.. ஐடி ஊழியர்கள் சுதாரிக்கணும்!
சென்னை: பிரபல தனியார் தொழில் ஆராய்ச்சி, முதலீட்டு நிறுவனமான சிக்னல்ஃபயர் நிறுவனம் ஏஐ காரணமாக உலகம் முழுக்க பணி இழப்பு அதிகரித்து உள்ளதாகவும், புதிய பணி சேர்ப்புகள் கடுமையாக சரிந்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிக்னல்ஃபயர் பகிர்ந்து கொண்ட தரவுகளின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் தொடக்க நிலை பணியமர்த்தல் 2019 முதல் 50 சதவீதத்திற்கும் மேலாகக் குறைந்துள்ளது. முன்னதாக, இந்த நிறுவனங்களில் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் புதிய பட்டதாரிகள் சுமார் 15 சதவீதமாக இருந்தனர். அந்த எண்ணிக்கை இப்போது வெறும் 7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மைக்ரோசாப்ட், கூகுள் நிறுவனத்தின் புதிய கோடிங்கில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இப்போது AIதான் எழுதுகிறது. இதனால் வரும் காலங்களில் ஏஐ வழியாக வரக்கூடிய வேலை வாய்ப்புகள் மிக கடுமையான சரிவை சந்திக்கும்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கணக்கெடுப்பில், பணியமர்த்தல் சமயங்களில் HRகளில் கிட்டத்தட்ட 87 சதவீதம் பேர் AI அனுபவமுள்ள நபர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறார்கள். நான்கில் ஒரு நபருக்கு இப்போது AI திறன் தேவையாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
அடுத்தடுத்து வேலை இழப்பு
பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்டோமேஷன் காரணமாக.. அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை தொடக்கத்தில் நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
அடிப்படையில், ஒரு காலத்தில் மனிதர்களால் கையாளப்பட்ட வேலையை இப்போது AI செய்வதால், பல பணிகள் மெதுவாக நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி , தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம் ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ஐபிஎம் சுமார் 200 எச். ஆர் பணியிடங்களை AI அமைப்புகள் மூலம் மாற்றியது. அதாவது எச். ஆர் பணிகளான பணிகளுக்கு தகவல் அனுப்புவது, பணியாளர்கள் தகவல்களை சேகரிப்பது, பணியாளர் கேள்விகளுக்கு பதிலளித்தல் அல்லது உள் ஆவணங்களை சோதனை செய்தல் போன்ற பணிகளைச் செய்யக்கூடிய மென்பொருள் அமைப்பை அந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தி உள்ளது. இது எச். ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் எச். ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
அதேபோல் கோடிங், டெஸ்டிங் செய்யக்கூடிய பணியாளர்கள், அதிக சம்பளம் வாங்கும்.. உயர் மேனேஜர் பொறுப்பில் உள்ளவர்களும் நீக்கப்பட்டு உள்ளனர். வரும் நாட்களில் ஏஐ அமைப்புகளை அதிக அளவில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதாவது இப்போது உள்ள ஏஐ பயன்பாட்டை இரண்டு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணி இழப்பு வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் பணி இழப்பு
உலகம் எங்கும் ஐடி துறையில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. பல நாடுகளில், பெரிய நிறுவனங்கள் ஏஐ வருகையை காரணம் காட்டி, ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. சமீபத்தில்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் கடுமையான பணி இழப்புகள் நடந்து உள்ளன.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொருள் பொறியாளர்களை கடுமையாக பாதித்துள்ளன. அதிலும் அவர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறி உள்ளது. அந்த நிறுவனம் AI-சார்ந்த கோடிங் முறைக்கு தற்போது தீவிரமாக மாறி வருகிறது.
மைக்ரோசாப்ட் மேற்கொண்ட சமீபத்திய பணிநீக்கங்கள் உலகளவில் சுமார் 6,000 ஊழியர்களைப் பாதிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாஷிங்டன்னில் மட்டும் 40 சதவீதத்திற்கும் அதிகமான பணிநீக்கங்கள் நடந்து உள்ளன. முக்கியமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் உருவாக்கிய ஏஐ அமைப்பே அவர்களின் வேலை இழப்பிற்கு காரணமாக மாறி உள்ளதாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்காக கோடிங் பணிகளை செய்யும் வகையில் சில ஏஐ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்த ஏஐ கட்டமைப்புகள் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு காரணமாக மாறிவிட்டது. அதாவது கோடிங் செய்பவர்கள், அதை டெஸ்டிங் செய்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
400 பொறியாளர்களை மேற்பார்வையிடும் மைக்ரோசாப்ட் துணைத் தலைவரான ஜெஃப் ஹல்ஸ், தனது குழுவிடம் OpenAI மூலம் இயங்கும் சாட்பாட்களைப் பயன்படுத்தி கோடிங் செய்யப்படும் கூறி உள்ளாராம். அவர்களின் குறியீட்டில் 50 சதவீதம் வரை ஏஐ மூலம் உருவாக்க உத்தரவிட்டு உள்ளார். இது பொதுவான 20-30 சதவீத AI பங்களிப்பை அதிகம் ஆகும். இதனால் மீதம் உள்ள பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்களாம்.
ஏஐ செய்யும் கோடிங் நன்றாக இருந்த காரணத்தால்.. prombt கொடுக்க மட்டும் பொறியாளர்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளதாம் அந்த நிறுவனம். இப்படி பல ஆயிரம் பேர்களை அடுத்தடுத்து அந்த நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி வருகிறது. இந்த பொறியாளர்கள் தாங்கள் அறியாமலேயே தங்களின் சொந்த வேலை இழப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டார்கள்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications