கோவையில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.. வேலை தேடி செல்வோருக்கு குட் நியூஸ்
கோவை: சென்னையில் இதெல்லாம் கனவில் கூட நடக்காது.. கோவையில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.. தொழில் நகரமான கோவைக்கு வேலை தேடி செல்வோர் இந்த விஷயங்களை பாருங்கள்.
தமிழ்நாட்டு மக்கள் வேலை தேடி செல்லும் ஊர்களில் முக்கியமான இடத்தில் இருப்பது கோயம்புத்தூர் தான்.. அதிகம் படித்தவர்களுக்கும், ஐடி கம்பெனியில் வேலை செய்ய விரும்புவோருக்கும் சென்னை என்றால், தொழிற்கல்வி பயின்றவர்கள், படிக்காமல் தொழில்களை கற்றவர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கு உண்மையில் கோவை தான் சொர்க்கம்.

சென்னையில் 35 கிமீ தூரம் சிங்கள் பெட் ரூம் வீட்டு வாடகை கண்டிப்பாக 15 ஆயிரம் அல்லது 10 ஆயிரத்திற்கு குறைவாக இருக்காது. மிக சாதாரண வீடாக இருந்தாலும் வெள்ளம் வந்து செல்லும் பகுதிகளில் கூட 7 ஆயிரத்தை எடுத்து வைக்க வேண்டும். சென்னையில் வீட்டு வாடகை, பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க, ஊருக்கு சென்று வர, காய்கறி வாங்க, உடை எடுக்க, விடுமுறை நாட்களில் வெளியில் சென்றுவர, மாதம் மாதம் பொருட்களுக்கான இஎம்ஐ என எல்லாவற்றையும் கணக்கு பார்த்தால், சராசரி வாழ்க்கை வாழவே 60000 சம்பளம் இருந்தால் தான் சாத்தியம். 30 ஆயிரம் சம்பளம் வாங்குவோரின் வாழ்க்கை எல்லாம் சென்னையில் மிக கொடுமையானது. அவர்களால் பெரிதாக மிச்சம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது.
இன்றைய சூழலில் இரண்டு பேர் சேர்ந்து சென்னையில் வேலை பார்த்தாலும் குடும்பம் நடத்தி, ஒரு இடம் வாங்கிவிட முடியாது. அப்படியே எல்லாவற்றையும் தியாகம் செய்து இடம் வாங்க நினைத்தாலும் ஒரு சென்ட் பல லட்சம் ரூபாய் இருக்கும். கண்டிப்பாக சென்னையை சுற்றி 50 கிமீ தூரத்திற்கு எங்குமே சாமானிய மக்களால் இடமோ, வீடோ வாங்குவது சாத்தியமே இல்லை.. ஏனெனில் சென்னையை சுற்றி 50 கிமீ தூரத்திற்கும் சென்னை மாநகரமாகவே இருக்கிறது. செங்கல்பட்டு தொடங்கி பொன்னேரி வரையிலும், மெரினா தொடங்கி அந்த பக்கம் திருவள்ளூர் வரையிலும் சென்னை விரிந்துவிட்டது. சென்னையில் இடம் வீடு வாங்கும் கனவு மட்டுமல்ல.. அடுக்குமாடி வீடு கூட வாங்கிவிட முடியாது. அவ்வளவு கடினம்.. இது ஒருபுறம் எனில் சென்னையில் வேலை கிடைப்பது எளிதானது. உடல் உழைப்பு தொழில்களை தவிர மற்ற வேலைக்கு இங்கு ஆட்கள் தேவை என்று எங்குமே போர்டு கூட பார்க்க முடியாது. தொழிற்கல்வி படித்தவர்களுக்கும் பெரிய ஊதியமோ, நிலையான வேலையோ தேடுவது சவாலானது. அதற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை நோக்கித்தான் வர வேண்டும். இதுதான் சென்னையின் நிலை...
ஆனால் கோவையில் அப்படி இல்லை.. வேலை தேடி செல்வோருக்கு சொர்க்கம்.. சென்னை போல் கோவை 50 கிமீ தூரம் எல்லாம் வளரவில்லை.. கோவையின் மையப்பகுதிகள் என்பதை விட கோவையை பொறுத்தவரை கிராமப்புறங்களில், கோவை நகரத்தை ஒட்டி புறநகர் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. எளிதாக படிப்பு, திறமைக்கு ஏற்ப ஊதியம் பெற முடியும்.. வேலையும் நிலையானதாக இருக்கும்..
கல்விக்காவோ, ஊருக்கு சென்றுவரவோ பெரிதாக செலவு செய்ய வேண்டியது இருக்காது. தங்கள் ஊரில் வாழ்ந்த அதே வாழ்க்கையை கோவையை ஒட்டிய கிராமத்தில் அவர்களால் வாழ முடியும். 10 வருடம் அனுபவம் உள்ளவர்கள் அங்கு 50000 சம்பளம் கூட பலர் வாங்குகிறார்கள். பலர் 30 ஆயிரம், 40000 வாங்குகிறார்கள். வார விடுமுறை, கூடுதல் நேரம் பார்த்தால் ஊதியம் என தொழிற்சாலைகளில் பணி என வாழ முடியும்.
கணவன் மனைவி இருவர் சேர்ந்து அங்கு வேலை செய்தால், சில வருடங்களிலேயே 50 ஆயிரம் வரை மாதம் சம்பளம் பெற முடியும். ஏன்.. சொந்த தொழிலும் எளிதாக அங்கு ஆரம்பிக்க முடியும். அதனால் மக்கள் கொஞ்சம் ஆடம்பரத்தை விரும்பாமல், பணத்தை கஷ்டப்பட்டு சேமித்து வந்தால், 3 ஆண்டிலேயே இடம் வாங்கலாம். கொஞ்சம் முயற்சி செய்தால், 8 முதல் 10 வருடத்தில் வீடு கட்டி கெத்தாக கோவையில் வாழ முடியும்.. இதுதான் கோவையின் சிறப்பு.
ஆனால் சென்னையில் எந்த காலத்திலும் சாமானியர்களால் வீடு வாங்கவோ, இடம் வாங்கவோ நினைத்து பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு ரியல் எஸ்டேட் விலை வளர்ந்து விட்டது.. அதேநேரம் சென்னை என்பது உயர் மற்றும் பணத்தார வர்க்கத்தினரின் சொர்க்க பூமி. அதிக சம்பளம், மிக பிரம்மாண்டமான சொகுசு வாழ்க்கை அவர்களுக்கு இங்கு தான் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications