கொத்து கொத்தாக.. அமேசானில் இருந்து நீக்கப்படும் ஊழியர்கள்.. 32 ஆயிரம் பேரா.. கேட்கவே குலை நடுங்குதே!
பெங்களூர்: அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர்களை பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 18 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில் மேலும் 14 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். அடுத்த சில நாட்களில் இவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதில் இந்தியர்கள் கணிசமாக நீக்கப்பட உள்ளனர். ஆனால் அதன் எண்ணிக்கை வெளியாகவில்லை.
அமேசான் 2025 ஆம் ஆண்டில் 14,000 மேனேஜர் பதவிகளை அகற்ற டார்கெட் வைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் $2.1 பில்லியன் முதல் $3.6 பில்லியன் வரை சேமிக்கும் முயற்சியில் அந்த நிறுவனம் உள்ளது. அதன் உலகளாவிய நிர்வாகப் பணியாளர்களில் 13% குறைப்பு இதன் மூலம் மேற்கொள்ளப்படும். உலக அளவில் மேனேஜர்கள் எண்ணிக்கையை 105,770 இலிருந்து 91,936 ஆகக் குறைக்க முதல் கட்டமாக முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனத்தில் பலர் வேலைக்கு சேர்ந்து பல ஆண்டு அனுபவத்தில் மேனேஜர்கள் ஆகி உள்ளனர். இவர்கள் தலா 2 லட்சங்களுக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் இவர்கள் மேனேஜர்கள் என்பதால் மேற்பார்வையை மட்டுமே மேற்கொள்கிறார்கள். பணிகளை செய்வது இல்லை. யாருக்கும் எந்த வேலையும் பெரிதாக இல்லை.

இவர்கள் பெரும்பாலும் முடிவுகளை மட்டுமே எடுக்கிறார்கள். இவர்கள் பணி நடப்பதையும் தாமதம் ஆக்குகிறார்கள். அமேசானின் பணியாளர்கள் எண்ணிக்கை கொரோனா சமயத்தில் போது வேகமாக அதிகரித்தது. 2019 இல் 798,000 ஊழியர்களாக இருந்து 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 1.6 மில்லியனுக்கும் மேலாக உயர்ந்தது. இது அந்த நிறுவனத்திற்கு சிக்கலாக மாறியது. இந்த நிலையில்தான் நிறுவனத்தில் சேர்ந்த பலர் மேனேஜர்களாக பதவி உயர்ந்து.. கடைசியில் நிறுவனத்திற்கே சுமையாக மாறி உள்ளனர்.
இந்த நிலையில்தான் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர்களை பணியில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் 18 ஆயிரம் பேர் நீக்கப்பட்ட நிலையில் மேலும் 14 ஆயிரம் பேர் நீக்கப்பட உள்ளனர். அடுத்த சில நாட்களில் இவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
உலக அளவில் பொருளாதார சரிவு
உலக அளவில் பொருளாதார சரிவின் தொடக்கமாக அதன் அறிகுறியாக இது இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் உள்ள எஸ்பி 500 பங்குகள் 10% சரிந்து உள்ளது. இதை மார்க்கெட் Market Correction என்று அழைப்பார்கள்.
இப்படியே போனால் அடுத்து Bear Market ஏற்படும். அதாவது 20% சரிவு ஏற்படும். அது நீடித்தால் Market Crash அதாவது மார்க்கெட் வீழும். அதை தொடர்ந்து recession, depression எனப்படும் மிகப்பெரிய அளவிலான பொருளாதார சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அமெரிக்க பங்கு சந்தை வீழ்ந்தால் அதை தொடர்ந்து இந்திய, இங்கிலாந்து போன்ற பங்குசந்தையும் கடுமையாக வீழ்ச்சி அடையும்.
பங்குச்சந்தை
அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை தொடங்கி உள்ளார். அவர் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக நாளுக்கு நாள் மார்க்கெட் மோசமாக சரிந்து வருகிறது. மார்க்கெட்டில் நிலையற்ற தன்மை உள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் நாள் ஒரே நாளில் அமெரிக்க மார்க்கெட்டில் 1.7 ட்ரில்லியன் டாலர் சரிந்து அழிந்து உள்ளது.
அதாவது இந்திய மதிப்பில் ரூ.14 கோடியே கோடி அழிந்து போய் உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்த்தக போரை அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ளார். வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரியலாம். இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறுகிறார்கள். பங்குசந்தை சரியலாம் என்பதால் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. இதனால் அமேசான் போலவே உலக அளவில் வேலை இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.












Click it and Unblock the Notifications