Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை..மாதம் ரூ. 75ஆயிரம் உதவித்தொகை..உடனே விண்ணப்பிங்க

தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்தவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 30 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பெல்லோஷிப் பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ஜூன் 10 கடைசி தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நீர் வளங்களை பெருக்குதல், விவசாய உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்தல் இணைப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு வழங்குதல், கல்வித் தரத்தை மேம்படுத்துதல்,சுகாதாரக் குறிகாட்டிகளை உயர்த்துதல், சமூக உள்ளடக்கத்தை அடைதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை எளிதாக்குதல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டை வழங்குதல், நிறுவன கடன் வசதி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையை அடைதல், தரவு நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகிய 12 பகுதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும் அரசின் மூலம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2022-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்தை (TNCMFP) செயல்படுத்துவதற்கான ஆணைகளை மொத்தமாக ரூ.5.66 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகள் மற்றும் திட்டங்களைத் தொகுத்து செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

கல்வித்தகுதி

கல்வித்தகுதி

தொழில்முறை படிப்புகளான பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் போன்ற படிப்புகளில் முதல்வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் படிப்புகளில் முதல் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். பணிபுரியும் அளவிற்கான தமிழ்மொழி அறிவு கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

வயதுத்தகுதி

இந்த பெல்லோஷிப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 22-30 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் மற்றும் BC/MBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகப்பட்ச வயது 33 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த பணியிடங்களுக்கான தேர்வு முறையில், கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தும்.

உதவித் தொகை எவ்வளவு

உதவித் தொகை எவ்வளவு

முதல்நிலை ( இணைய அடிப்படையிலான தேர்வு), விரிவானத் தேர்வு ( எழுத்துத் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு தலா ரூ.65,000 மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களின் தற்செயலான செலவுகளைச் சமாளிக்க தலா ரூ10,000 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்வது எப்படி

தேர்வு செய்வது எப்படி

தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவர். முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படுவோருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கப்படும். அவரவர்களின் தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் ஊக்க ஊதியத்துடன் இரண்டு ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும்.

மேற்கொள்ளவிருக்கும் பணிகள்:

மேற்கொள்ளவிருக்கும் பணிகள்:

தமிழக முதலமைச்சர் அலுவலக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட நிரல்களைப் பற்றிய தரவு உந்துதல் முடிவெடுப்பதைக் கண்காணிப்பது, சிக்கல்களைக் கண்டறிவது போன்ற பணிகளை முதன்மையாக மேற்கொள்வார்கள். இதோடு கள நிலைமையை மதிப்பிடுவதற்கும், கருத்துக்களைப் பெறுவதற்கும், தகுந்த பின் தொடர்தல் நடவடிக்கைகளில் உதவுவதற்கும் தேர்வாகும் நபர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

விண்ணப்பிக் கடைசி தேதி

விண்ணப்பிக் கடைசி தேதி

திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்படுத்துதலை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம்'என்று கூறப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்கள், https://www.bim.edu/tncmpf எனும் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் பெல்லோஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 10. விண்ணப்பக் கட்டணம் இல்லை. மாதாந்திர உதவித்தொகை ரூ. 65000 வழங்கப்படும். இளைஞர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+