90×20 .. 1800 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு எப்படி இருக்கும்.. தேர்வர்களே நோட் பண்ணுங்க
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பித்துவிட்டு, அதனை எழுதாமல் போனவர்கள் பல ஆயிரம் பேர் . வெறும் 90பேர் உள்ள பதவிக்கு லட்சக்கணக்கனோர் விண்ணப்பித்தாலும், சில ஆயிரம் பேர் தான் தேர்வுக்கு முழுமையாக தயார் ஆகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் முதல் நிலை தேர்வு முடிந்துமெயின் தேர்வுக்கு போக போகிறார்கள் தெரியுமா?
டிஎன்பிஎஸ்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 மற்றும் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4, போன்ற தேர்வுகளில் வெல்பவர்கள் தான் தமிழ்நாட்டில் அரசு ஊழியராக அரசு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-I), உதவி ஆணையர் (வணிக வரிகள்), கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவற்றில் 90 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎஸ் குரூப் 1 காலியிடங்கள் விரம் : 90
துணை ஆட்சியர் 16
துணைக் கண்காணிப்பாளர் (வகை-I) 23
உதவி ஆணையர் (வணிக வரி) 14
கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் 21
ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் 14
தமிழ்நாடு பொதுப் பணியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 01
மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) 01
மேற்கண்ட TNPSC குரூப் 1 பணியிடங்களான மேற்கண்ட பணியிடங்களுக் குரூப் 1 பிரிலிம்ஸ் தேர்வு ஜூலை 13ம் தேதி நடந்து முடிந்தது. இந்த முதல்நிலைத் தேர்வு ஆப்ஜெக்டிவ் வகை முறையில் நடந்தது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 38,247 பேர் விண்ணப்பித்தார்கள். ஆனால் 37,891 மையங்களில் நேற்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 60,340 பேர் மட்டுமே பங்கேற்றார்கள். இதில் 77,907 பேர் தேர்வுக்கு வரவில்லை.
TNPSC குரூப் 1 தேர்வில் பொது அறிவு பகுதியில் இருந்து 175 வினாக்களும், கணிதம் மற்றும் நுண்ணறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்று இருந்தது. தேர்வில், நடப்பு நிகழ்வுகள், மத்திய- மாநில அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் அதிக எண்ணிக்கையில் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வு புத்திக்கூர்மையை சோதிக்கும் வகையில் இருந்தது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலைத்தேரவு எழுதியவர்கள் அறிய வேண்டியவை: முதல்நிலைத் தேர்வு மூலம் ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் மெயின் தேர்வுக்கு 1800 பேர் அனுமதிக்கப்பட உள்ளார்கள். இந்த தேர்வு விரிவாக விடை எழுதுவும் வகையில் அமைந்துள்ளது.
இதில் பொது அறிவு தொடர்பான 3 தாள்களும், கட்டாய தமிழ்மொழி தகுதித்தாளும் இடம் பெறும். தமிழ் மொழி தாளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆகும். இந்த மெயின் தேர்வில் பொது அறிவு தாள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.மெயின் தேர்வு விரிவான விடை அளிக்கும் வகையில இருக்கும். ஒட்டுமொத்தமாக மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் அதிகாரிகளாக பணிக்கு தேர்வுசெய்யப்படுவர்.
குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக துணை ஆட்சியர் பணியில் சேர்ந்தால், 1 குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்த ஐஏஎஸ் அதிகாரியாகவும், அதேபோல் டிஎஸ்பி ஆக பணியில் சேர்வோர் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறுவார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் ஐபிஎஸ் பொறுப்பு வழங்கப்படும் . இதுதவிர உதவி ஆணையர் (வணிக வரி)இ கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட இதர பணி அதிகாரிகள் வருவாய் அல்லாத பிரிவின் கீழ் ஐஏஎஸ் அதிகாரி ஆக முடியும் என்கிறார்கள் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications