தமிழகத்தில் அரசு பணியில் இருக்கீங்களா? வாரிசு வேலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் அரசு பணியில் இருக்கீங்களா? வாரிசு வேலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.அதுவும் எப்படி என்றால், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் இறந்து போனாலும், வாரிசுகள் கருணை அடிப்படையிலான பணிக்கு தகுதியானவர்கள் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தலைமையகத்தில் இருந்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பணியின் போது இறந்த போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படுகின்றன. இப்பணிகளுக்கு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசார் இறந்து போனாலும், அவரின் வாரிசுகளும் விண்ணப்பிக்கலாம்.

கருணை அடிப்படையில் பணி: ஓய்வு பெற ஐந்து ஆண்டுகள் இருக்கும் முன், நோய் வாய்ப்பட்டு செயல்பட முடியாத நிலையில் உள்ள போலீசாரின் வாரிசுகளும் தகுதியானவர்களே. காணாமல் போன போலீஸ்காரர், ஓய்வு பெறும் தேதிக்கு முன் இறந்து விட்டார் என தகவல் கிடைத்து, அதை நீதிமன்றம் உறுதி செய்திருந்தால், அவரின் வாரிசுகளும் கருணை அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விதிகள் என்ன: பொதுவாக கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்கும் திட்டம் என்பது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களின் வேதனையில், துயரத்தில் பங்கெடுத்து, அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கைகொடுப்பதற்காகத்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது.இந்த கருத்தை உயர்நீதிமன்றமே ஒருமுறை கூறியுள்ளது.
காலியிடங்கள்: பொதுவாக கருணை அடிப்படையில் பணி வழங்கும்போது மாவட்ட அளவிலும், துறை ரீதியாகவும் சீனியாரிட்டி பட்டியல் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. கருணை அடிப்படையில் பணி கோரும்போது காலியிடம் இருந்தால் துறைத் தலைவர்களே 15 நாட்களுக்குள் வேலை வழங்க வேண்டுமென விதிகளில் இருக்கிறது. உரிய காலியிடம் இல்லை என்றால் 3 மாதங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்க வேண்டுமென விதிகள் உள்ளது.
வாரிசு வேலை அரசாணை என்ன: அரசாணையில் நெருங்கிய உறவினர்கள் என வரையறுக்கப்பட்டுள்ள அரசு ஊழியரின் மனைவி/ கணவன்/ மகன்/ திருமணமாகாத மகள் ஆகியோர் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறத் தகுதியுடையவர் ஆவார். கணவனால் கைவிடப்பட்டு, பணியிடை மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பத்தில் வசித்து வரும் மகளுக்கும் மற்றும் அவ்வாறு வசித்து வரும் விதவை மகள் மற்றும் விவாகரத்துப் பெற்ற மகளுக்கும் பணியிடை இறந்த அரசுப் பணியாளரின் வாரிசுதாரரான விதவை பணி நியமனம் வழங்கிட ஒப்புதலளிக்கும் நேர்வில் அவர்களுக்கும் பணி நியமனம் செய்யப் பரிசீலிக்கலாம்,
திருமணமான பெண்கள் அரசு வேலை: திருமணமாகாத நிலையில் உள்ள பெண்ணுக்கு, அக்குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்கள் அளித்த மறுப்பின்மைச் சான்றிதழ், திருமணமான பின்,அப்பெண்ணுக்கு பணி அளிக்கப்படும் போது, மீண்டும், மற்ற வாரிசுதாரர்களால் மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
திருமணம் செய்து கொண்ட பின்னர் பணி வாய்ப்பு பெறும் தனியர், தனது பெற்றோரின் குடும்பத்திற்கு உதவிபுரியும் வகையில் உறுதி ஆவணம் வழங்கப்பட வேண்டும். திருமணம் செய்து கொண்ட பின்னர் பணி வாய்ப்பு பெறும் தனியர், தனது பெற்றோரின் குடும்பத்திற்கு உதவிபுரியும் வகையில் உறுதி ஆவணம் வழங்கப்பட வேண்டும். கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரியுள்ள திருமணமாகாத பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நபர், எதிர்காலத்தில் அவரால் அவரது பெற்றோருக்குச் செய்யும் உதவிக்கு மறுப்பு ஏதும் ஏற்படுத்த மாட்டேன் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும்.இதுதான் தற்போது அரசு வேலை தொடர்பான அரசாணைகள் ஆகும்.
-
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை!












Click it and Unblock the Notifications