அனுபவம் வேண்டாம்.. ரூ.6 லட்சம் டூ ரூ.10 லட்சம் வரை சம்பளம்..சென்னையில் ஐடி வேலை.. ஆக.26 கடைசி நாள்
சென்னை: சென்னையில் செயல்பட்டு வரம் Avasoft நிறுவனத்தில் டிரெய்னி சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்பயப்ட உள்ளனர். இந்த பணிக்கு பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஆகஸ்ட் 26 (நாளை மறுநாள்) முடிவுக்கு வர உள்ளது. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளது. அந்த வகையில் ஐடி துறையில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பிரபல நிறுவனங்களில் ஒன்று AVASOFT.

இந்த நிறுவனம் அமெரிக்காவின் பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு சென்னையில் அலுவலகம் உள்ளது.
சென்னை நாவலூரில் உள்ள எஸ்எஸ்பிடிஎல் பெட்டா பிளாக்கின் 3வது மாடியில் (Alphacity) இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது அவாசாப்ட் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:
Avasoft நிறுவனத்தில் தற்போது டிரெய்னி சாப்ட்வேர் இன்ஜினியர் (Trainee Software Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 0 - 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் கல்லூரி படிப்பை 2022 ம் ஆண்டில் இருந்து முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 26 கடைசி நாளாகும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
இவ்வாறு விண்ணப்பம் செய்வோருக்கு ஆகஸ்ட் 30ம் தேதி எழுத்து தேர்வு நடக்கும். பிறகு செப்டம்பர் ம் தேதி ஆன்லைனில் டெக் இண்டர்வியூ நடைபெறும். பிறகு இறுதிக்கட்ட இண்டர்வியூவுக்கான தேதி, நேரம் அறிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications