Wipro-வில் சூப்பர் வேலை.. ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. சூப்பர் சான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விப்ரோ நிறுவனத்தில் காலியாக உள்ள சிஸ்டம் என்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் விப்ரோ (Wipro) ஒன்று. இந்த நிறுவனம் பெங்களூரில் இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் பெங்களூர் விப்ரோவில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

Bangalore Wipro Hiring 2024 for System Engineer

தற்போதைய அறிவிப்பின் படி விப்ரோ நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியர் (System Engineer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இருப்பினும் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது பற்றிய விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் அதிகமானவர்கள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் வின்டோஸ் (Windows), அவுட்லுக்(Outlook), டீம்ஸ் (Teams), சிட்ரிக்ஸ் (Citrix), விபிஎன் (VPN), விடிஐ (VDI), செக்யூரிட்டி அப் (Security App) உள்ளிட்டவற்றில் ஏற்படும் பிரச்சனையை தீர்க்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மற்றும் இ-மெயில் வழியாக பதிலளித்து அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டியிருக்கும். ரிமோட் முறையில் சிஸ்டம் பிரச்சனைகளை தீர்க்க அறிந்திருக்க வேண்டும். அதோடு புதிய தொழில்நுட்பம் பற்றி கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விப்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் வேலையை விரும்புவோர் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பிப்பது நல்லது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+