பெல் நிறுவனத்தில் வேலை.. லட்சங்களில் சம்பளம்! இன்ஜினியரிங் படிச்சவங்க விட்றாதீங்க.. அருமையான சான்ஸ்!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் புரொபேஷனரி இன்ஜினியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பெல் நிறுவனம். பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் என அழைக்கப்படும் இந்த பெல் நிறுவனம் நாடு முழுவதும் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளது. தமிழகத்தின் திருச்சியிலும் பெல் நிறுவன தொழிற்சாலை உள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். இதனால், பெல் நிறுவனத்தில் வெளியிடும் ஆட்சேர்ப்பு அறிவிப்பையும் வேலை தேடும் இளைஞர்கள் ஆர்வமுடன் எதிபார்த்து வருகிறார்கள். தற்போது பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 350 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
புரொபேஷனரி இன்ஜினியர் ( எலக்ட்ரானிக்ஸ்) - 200
புரொபேஷனரி இன்ஜினியர் (மெக்கானிக்கல்) - 150
என மொத்தம் 350 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி: இன்ஜினியர் எலக்ட்ரானிக்ஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் பி இ/ பிடெக்/ பி.எஸ்.சி ஆகிய பட்டப்படிப்புகளில் ஒன்றை படித்து இருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்/ எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்/ டெலி கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து படித்து இருக்க வேண்டும். மெக்கானிக்கல் பணியிடத்திற்கு இன்ஜினியரிங் டிகிரியில் மெக்கானிக்கல் பிரிவை எடுத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 01.01.2025 தேதிப்படி 25 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்பு 10 ஆண்டுகளும் வழங்கப்படும். அதாவது எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் என்றால் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000 முதல் 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழி தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: கணினி வழியிலான ஆன்லைன் தேர்வை பொறுத்தவரை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?: விருப்பமும் கல்வி தகுதியும் இருக்கும் தேர்வர்கள் https://bel-india.in/job-notifications/ - என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications