மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. ரூ.85 ஆயிரம் வரை சம்பளம்.. டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசின் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்) சார்பில் 119 பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 119 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, ஐடிஐ , நர்சிங் முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் சம்பள விவரம் உள்ளிட்டவற்றை தெளிவாக காணலாம்.

காலிப்பணியிடங்கள் விவரம்: டிப்ளமோ டிரெயினி (52 பணியிடங்கள்), டிப்ளமோ ட்ரெய்னி எலக்ட்ரிக்கல் (27 பணியிடங்கள்), டிப்ளமோ ட்ரெய்னி (07 பணியிடங்கள்), ஐடிஐ டிரெய்னி- மெஷினிஸ்ட் (16 பணியிடங்கள்) ஐடிஐ டிரெய்னர் -டர்னர் (16 பணியிடங்கள்) ஸ்டாப் நர்ஸ் (01) என மொத்தம் 119 பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: துறை சார்ந்த கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் கொண்ட டிப்ளமோவில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் , எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், சிவில் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். ஐடிஐ - மெஷினிஸ்ட் பணியிடத்திற்கு ஐடிஐ டர்னர் டிரேட் மற்றும் அப்ரெசெண்டிஸ் பயிற்சி முடித்து இருத்தல் அவசியம்.
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஸ்டாப் நர்ஸ் பணியிடத்திற்கு பி.எஸ்.சி (நர்சிங்) அல்லது பத்த்தாம் வகுப்புடன் 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமோ நர்சிங் &idwifery முடித்து இருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 29 வயது பூர்த்தியாகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். நர்சிங் பணிக்கு மட்டும் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
18-10-2023 அன்றைய தேதிப்படி 29 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். நர்சிங் பணிக்கு மட்டும் 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம் எவ்வளவு: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள். இதில் ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் ரூ.15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். பயிற்சி காலம்/ ஒப்பந்த காலம் முடிந்த பிறகு தேவையின் அடிப்படையில் பணி நிரந்தரமாக்கப்படும். நிரந்தர பணியிடத்திற்கான சம்பள விவரத்தை பார்க்கலாம்.
டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கு ரூ.23,910 முதல் ரூ.85,570 வரை சம்பளமாக வழங்கப்படும். ஐடிஐ டிரெய்னி மெஷினிஸ்ட் மற்றும் டிரெய்னர் பணியிடத்திற்கு ரூ.16,900- 60,650 வரை கிடைக்கும். ஸ்டாப் நர்ஸ் பணியிடத்திற்கு ரூ.18,780- 67,390 வரை சம்பளமாக கிடைக்கும். கணிணி அடிப்படையிலான எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒப்பந்த காலம் பயிற்சி காலம் உள்ளிட்ட விவரங்கள் தேர்வு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க https://www.bemlindia.in/careers/current-recruitments/ என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும். தேர்வு அறிவிப்பை தெரிந்து கொள்ள https://www.bemlindia.in/wp-content/plugins/career/WCP/DATA/Writereaddata/Career/Advt_KP_S_06_2023.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications