தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் வேலை.. இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு.. விவரம்
சேலம்: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தினர் விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்கள் விவரம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகளின் கீழ் சேலம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 196 அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. அதேபோன்று 6 குறு அங்கன்வாடி பணியாளர், 215 உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 417 காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 25 முதல் 35 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி பெண்கள் 25 முதல் 38 வயது வரையிலும், அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 20 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்கள் விதவைகள், ஆதரவற்ற பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வகுப்பினர் 20 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பெண்கள் 20 முதல் 43 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சேர்ந்தவராகவோ, அதே கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பிற கிராமத்தை சேர்ந்தவராகவோ, அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகில் உள்ள அடுத்த கிராம ஊராட்சியை சேர்ந்தவராகவோ இருக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளில் உள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வார்டு அல்லது அருகிலுள்ள வார்டுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 133 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
"ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் செயல்படும் அங்கன்வாடி குழந்தைகள் மையங்களில் 133 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளன. அதாவது 120 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படும். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யும் பணியாளர்கள் 12 மாத காலம் பணியினை முடித்தபின், சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவார்.அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் பணிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 25 முதல் 35 வயது வரை ஆகும். மேலும் விதவைகள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 25 முதல் 40 வயது வரை. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 25 முதல் 38 வயது வரை.
அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு 20 வயது முதல் 40 வயது வரை. விதவைகள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை. மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு 20 முதல் 43 வயது வரை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும், தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதி வரை பணி நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications