சிபிஎஸ்சி-யில் சூப்பர் வேலை.. 12ம் வகுப்பு, என்ஜினீயரிங், டிகிரி, பிஎட் முடித்தோருக்கு நல்ல சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் 6 பிரிவுகளில் காலியாக உள்ள 118 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்தவர்கள், டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங், பிஎட் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE or Central Board of Secondary Education) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

CBSE Recruitment for 118 jobs including Assistant Secrtary and Junior Engineer

காலியிடங்கள்: குரூப் ஏ பிரிவில் அசிஸ்டென்ட் செக்ரட்டரி (Assistant Secretary) பணிக்கு 64 பேர் தேர்வு, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு 3 பேர் நிரப்பப்பட உள்ளனர். குரூப் பி பிரிவில் ஜுனியர் என்ஜினீயர் பணிக்கு 17 பேர், ஜுனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர் பணிக்கு 7 பேர், குரூப் சி பிரிவில் அக்கவுண்டன்ட் பணிக்கு 7 பேர், ஜுனியர் அக்கவுண்டன்ட் பணிக்கு 20 பேர் என மொத்தம் 118 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி: அசிஸ்டென்ட் செக்ரட்டரி பணிக்கு பிஎட், எம்எட், எம்பில், டிகிரி, முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்களும், அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்ட், பைனான்ஸ் பிசினஸ் ஸ்டடீஸ், காஸ்ட் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பட்ட மேற்படிப்பு, எம்பிஏ (பைனான்ஸ்), சிே, ஐசிடபிள்யூஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலலாம்.

ஜுனியர் என்ஜினீயர் பணிக்கு பிஇ, பிடெக் பிரிவில் சிவில் என்ஜினீயரிங் முடித்தவர்களும், ஜுனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர் பணிக்கு முதுகலை பட்டப்படிப்பில் ஹிந்தி, ஆங்கிலம் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் டிப்ளமோ முடித்து ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பு வகையில் மத்திய, மாநில அரசு பணியில் 3 ஆண்டு பணிஅனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அக்கவுண்டன்ட் பணிக்கு காமர்ஸ், அக்கவுண்ட்ஸ், பைனான்ஸ், பிசினஸ் ஸ்டடீஸ், காஸ்ட் அக்கவுண்டென்ட் பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஜுனியர் அக்கவுண்டன்ட் பணிக்கு 12ம் வகுப்பு படிப்பை அக்கவுண்டன்சி, பிசினஸ் ஸ்டடீஸ், எக்கனாமிக், காமர்ஸ், பைனான்ஸ், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், taxation, காஸ்ட் அக்கவுண்டென்ட் உள்ளிட்ட ஏதேனும் பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். மேலும்ஆங்கிலத்தில் நிமிடத்துக்க 35 வார்த்தைகளும், ஹிந்தியில் நிமிடத்துக்கு 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: அசிஸ்டென்ட் செக்ரட்டரி, அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும், ஜுனியர் என்ஜினீயர் பணிக்கு 32 வயதுக்குள்ளும், ஜுனியர் டிரான்ஸ்லேஷன் ஆபிசர், அக்கவுண்டன்ட் பணிக்கு 7 பேர், ஜுனியர் அக்கவுண்டன்ட் பணிக்கு பணிக்கு 30 வயதுக்குள்ளும், ஜுனிர் அக்கவுண்டன்ட் பணிக்கு 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 11.04.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினர் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் cbse.nic.in இணையதளம் மூலம் ஏப்ரல் மாதம் 11ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யலாம். குரூப் ஏ பிரிவில் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் பி பிரிவு பணிகள் என்றால் விண்ணப்ப கட்டணம் ரூ.800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, முன்னாள் படை வீரர்கள், பெண்கள் என்றால் விண்ணப்ப கட்டணம் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-22240112 என்ற தொலைபேசி எண்ணை பணி நாட்களில் காலை 9 மணி முதல் 5.30 மணிக்குள் தொடர்பு கொண்டு தீர்த்த கொள்ளலாம். இல்லாவிட்டால் [email protected] இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பில் சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படும்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+