Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிபிஎஸ்இயில் வேலை.. டிகிரி முடிச்சிருக்கீங்களா? சூப்பர் வாய்ப்பு.. உடனே விண்ணப்பிங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யில் 212 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் வேலை என்பதால் கை நிறைய சம்பளம் + சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும். மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த வேலை வாய்ப்பு அறிவிப்புக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

மத்திய அரசின் இடை நிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. சிபிஎஸ்இ அலுவலகங்களில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது பணியிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 212 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

job central government jobs

பணியிடங்கள் விவரம்:
கண்காணிப்பாளர் - 142
ஜூனியர் அஸிஸ்டண்ட் - 70
என மொத்தம் 212 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வி தகுதி: சூப்பிரண்டண்ட் எனப்படும் கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு: மேற்கூறிய இரண்டு பணியிடங்களுக்குமே குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 30.01.2025 அன்றைய தேதிப்படி 18 வயது பூர்த்தியாகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு முறை: சூப்பிரண்டண்ட் பணிக்கு இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். திறன் தேர்வு முதலில் நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், 1:10 என்ற அடிப்படையில் அடுத்த கட்ட தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள்.

ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் பணிக்கும் இரண்டு கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட திறன் தேர்வுக்கு பிறகு 1: 5 என்ற விகிதத்தில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளின் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?: தேவையான கல்வி தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆன்லைன் வழியாகவே விண்ணப்பம் கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்க வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://www.cbse.gov.in/cbsenew/documents/Notification_SUPDT_JA_31122024.pdf இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+