மத்திய அரசு வேலை..10 ஆம் வகுப்பு முடிச்சிருந்தால் போதும்.. மாதம் ரூ.63,000 வரை சம்பளம்.. செம சான்ஸ்
சென்னை: 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் வரி அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எத்தனை பணியிடங்கள் என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.
மத்திய வரிகள் மற்றும் கலால் துறையின் கொச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள 14 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணி என்பதால், தேர்வு செய்யப்படுப்வர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கும். காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
சமையல் உதவியாளர்: 1
கிளர்க்: 01
கேண்டீன் உதவியாளர்: 12
என மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* சமையலர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன், சமையல் கலையில் ஓராண்டு அனுபவம் பெற்றிருப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்களின் திறனை பரிசோதிக்கும் வகையில் திறன் தேர்வு வைக்கப்படும்.
* கிளர்க் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வணிகவியல் பாடப்பிரிவில் படித்து இருக்க வேண்டும். டைபிங் டெஸ்ட் வைக்கப்படும். மணிக்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும்.
* கேண்டீன் உதவியாளர் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு: அனைத்து பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?:
சமையல் உதவியாளர்: ரூ. 19,900 - 63,200/-
கிளர்க்: ரூ. 19,900 - 63,200/-
கேண்டீன் உதவியாளர்: ரூ. 18,000 - 56,900/-
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு, டைப்பிங் தேர்வு அடிப்படையில் தகுதியான தேர்வர்கள் தேர்வு செய்யபப்டுவார்கள். கேரளாவின் கொச்சியில் உள்ள அலுவலகத்தில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?: தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை தெளிவாக விண்ணப்ப லெட்டரில் எழுதி, தேவையான கல்வி தகுதி சான்றிதழ் நகல்களுடன் கீழ் காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Principal Commissioner of Central Tax & Central Excise,
Central Revenue Building,
I.S Press Road,
Kochi - 682018, Kerala,
விண்ணப்பிக்க கடைசி நாள் - 25.10.2024: அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்கலாம். தேர்வு அறிவிப்பினை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://cenexcisekochi.gov.in/hindi/wp-content/uploads/PDFs/20240927_CanteenApplication.pdf
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications