கைநிறைய சம்பளம்.. டிகிரி மட்டுமே போதும்.. தமிழ்நாட்டிலேயே சூப்பர் வேலை.. அழைக்கும் சென்ட்ரல் வங்கி
மும்பையை தலைமையிடமாக கொண்டு பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
சென்னை: பொதுத்துறை வங்கியாக உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 5,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்து வங்கி வேலையை பெறலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழ்நாட்டிலேயும் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒன்று தான் சென்ட்ரல் வங்கி. மும்பையை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் சென்ட்ரல் வங்கியில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி Apprentice பிரிவில் காலியாக உள்ள 5 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டில் 230 பணியிடங்களும், புதுச்சேரியில் ஒரு பணியிடமும் காலியாக உள்ளன. மீதமுள்ள இடங்கள் பிற மாநிலங்களில் காலியாக இருக்கின்றன.

இந்த பணிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனவங்களில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்லாம். விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 20 வயது நிரம்பி இருப்பதோடு, அதிகபட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 31.03.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினரக்கு 5 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினருக்கு 10 வயது வரையும் தளர்வு உண்டு.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் பணிசம்பந்தமாக டிராவல் செய்ய வேண்டி இருந்தால் அலோவன்ஸ் தொகையும் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணமாக ரூ.800 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.600, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.400 என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் centralbankofindia.co.in எனும் இணையதளம் மூலம் ஏப்ரல் மாதம் 3ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் உள்ளூர் மொழி ப்ரூப் ஆகியவற்றின் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
-
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ்












Click it and Unblock the Notifications