மிஸ் பண்ணிடாதீங்க.. இன்னும் 2 நாள் மட்டுமே! 48,000 சம்பளம்..டிகிரி போதும்! சென்ட்ரல் பேங்கில் வேலை!
சென்னை: இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மொத்தம் 266 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை மறுநாள் ( 09.02.2024) வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஏராளமான பொதுத்துறை வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இதற்கான பணியாளர்கள் ஆட்சேர்க்கை ஐபிபிஎஸ் மூலமாகவும், விண்ணப்பங்கள் அடிப்படையில் சில நேரடியாகவும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய பொதுத் துறை வங்கியான சென்ட்ரல் பேங்க ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள சுமார் 266 ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு வேலை வாய்ப்பின் கீழ் வரும் இந்த வங்கிக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் கிளைகள் இருக்கிறது. தற்போது அங்கெல்லாம் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கும் நிலையில் தமிழகம் புதுச்சேரியில் 266 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த 266 காலி பணியிடங்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், ஜெனரல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட உள்ளது. கல்வி தகுதியாக ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தது கூடுதல் தகுதியாக கருத்தில் கொள்ளப்படும்.
பணியின் பெயர்: ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 266
ஊதிய விபரம்: மாதம் ரூ.48,480
வயது வரம்பு: பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 21 முதல் 32க்குள் இருக்க வேண்டும். 2.4.1996 தேதிக்கு முன்பாகவும், 30.11.2024ப் படி வயது வரம்பு கருத்தில் கொள்ளப்படும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு உண்டு.
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கி அல்லது புற நிதி நிறுவனங்களில் குறைந்தது ஒன்று முதல் மூன்று ஆண்டு பணி செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாட்டில் நேர்முகத் தேர்வும், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இது தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: மாற்றுத் திறனாளிகள், பெண்கள் பிரிவினர் 175 ரூபாயை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். அனைத்து இதர பிரிவினர்கள் 850 ரூபாயை விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்ப கட்டணம் ஏற்றுக் கொள்ளப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09/02/2025
விண்ணப்பிக்கும் முறை: www.ibpsonline.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.centralbankofindia.co.in என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications