மத்திய அரசு வேலை.. 411 காலிப்பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு முடிச்சிருக்கீங்களா? விண்ணப்பிக்க ரெடியா
சென்னை: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பில் (பி.ஆர்.ஓ) காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விவரங்களை இங்கு பார்க்கலாம்.
பி.ஆர்.ஓ எனப்படும் எல்லைப்புற சாலைகள் அமைப்பு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும். எல்லைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணியை இந்த எல்லைப்புற சாலைகள் அமைப்பு மேற்கொள்கிறது.

பி.ஆர்.ஓ-வில் காலியாக உள்ள பணியிடங்களை அவ்வப்போது நிரப்புவது வழக்கம். டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஆர்ஓவில் காலியாக உள்ள 411 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சமையலர் (ஆண்) - 153
மேஸ்திரி - 172
இரும்பு கொல்லர் - 75
மெஸ் வெயிட்டர் - 11
என மொத்தம் 411 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன
கல்வி தகுதி: அனைத்து பணியிடங்களுக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அது மட்டும் இன்றி எல்லைப்புற சாலைகள் அமைப்பு நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். மேஸ்திரி பணிக்கு 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியுடன் கட்டிட கட்டுமானம் பிரிவில் தொழில்துறை பயிற்சிக்கான (Industrial Training) சான்றிதழ் உள்ளிட்டவை அவசியம். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்களும் 25 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகள் அளிக்கப்படும். அதாவது 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. https://marvels.bro.gov.in/BROMarvels/CafeBRO என்ற இணையதளம் வாயிலாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க வரும் 24.02.2024 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://marvels.bro.gov.in/Download/Recruitment_Activities_Against_Advt_No01_2025.pdf
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications