மத்திய அரசு வேலை.. 764 காலிப்பணியிடங்கள்! மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்
சென்னை: மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டிஆர்டிஓ-வில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 764 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்திய ராணுவத்திற்கு தேவையான நவீன ஆயுதங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் டிஆர்டிஓ ஈடுபட்டு வருகிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் விஞ்ஞானிகள் உள்பட சுமார் 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

டிஆர்டிஓவில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிட்டு நிரப்பப்படுகின்றன. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 764 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
சீனியர் டெக்னீஷியன் -B யில் ஆட்டோமொபைல் என்ஜினியரிங், கெமிக்கல் என்ஜினியரிங், வேதியியல், சிவில் என்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் & என்ஜினியரிங் என மொத்தம் 17 வகையான பணியிடங்கள் உள்ளன.
டெக்னிஷியன் -A பிரிவில் கார்பெண்டர், சிஎன்சி ஆபரேட்டர், எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிஸ்ட், ஆப்டிகல் பணியாளர், சர்வேயர், டர்னர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 764 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியை பொறுத்தவரை பணியின் தன்மைக்கேற்ப மாறுபடும். துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி ஆகிய பாடப்பிரிவுகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
18 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அரசு விதிமுறைகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம் எவ்வளவு?
சீனியர் டெக்னீஷியன் -B; ரூ.35,400 - 1,12,400 வரை சம்பளமாக வழங்கப்படும். டெக்னிஷியன் -A; ரூ.19,900 - 63,200 வரை சம்பளமாக கிடைக்கும்.
தேர்வு முறை:
டையர் 1 (கணினி வழி தேர்வு), டையர் 2 (Trade Test), சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை முழுமையாக படித்து உறுதி செய்து கொண்ட பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.500 கட்டணமாகும். முதல் கட்ட தேர்வு எழுதியவர்களுக்கு ரூ.500 திருப்பி அளிக்கப்படும். விண்ணப்பிக்க வரும் 01.01.2026 கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/3/302645671.pdf
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
EPFO முக்கிய அறிவிப்பு.. இனி முக்கிய சேவைகளுக்கு ஆதார் முக அங்கீகாரம் அவசியம்.. யாருக்கு கட்டாயம்? -
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
IT Jobs: எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் நாளை இண்டர்வியூ.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க -
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தகுதி அரசு வேலைகள்.. தமிழக வங்கி வழக்கில் உச்ச நீதிமன்றம் மேஜர் தீர்ப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications