பிக் பாஸ் தனலட்சுமிக்கு எங்கேஜ்மென்ட்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? சைலண்டாக நடந்த பங்க்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக நாட்கள் இருந்த தனலட்சுமிக்கு நேற்று எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. அவர் தன்னுடைய எங்கேஜ்மென்ட் புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்ததும், அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிதாக டிவி நிகழ்ச்சிகளில் வராமல் இருந்த தனலட்சுமி இப்போது தனது எங்கேஜ்மென்ட் போட்டோ மூலமாக வைரலாகி வருகிறார்.

Bigg Boss

பிக் பாஸ் தனலட்சுமிக்கு எங்கேஜ்மென்ட்

பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து தற்போதைய பத்தாவது சீசன் வரைக்கும் ஒவ்வொரு சீசனிலும் யாராவது ஒரு சில போட்டியாளர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமாகி விடுவார்கள். ஆரம்பத்தில் பார்க்கும்போது இவங்க எல்லாம் இந்த நிகழ்ச்சியில் தாக்குபிடிக்க மாட்டாங்க என்று நினைக்க வைத்தாலும், கடைசியில் அவங்க தான் அதிக நாட்கள் இருப்பார்கள். அதுபோலத்தான் ஆறாவது சீசனில் காமன் மேனாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த தனலட்சுமி 76 நாட்கள் தாக்கு பிடித்து இருந்தார்.

பிக் பாஸுக்குள் சண்டை

அதுமட்டுமல்லாமல் அசீமுடன் பொம்மை டாக்ஸ்கில் அவர் போட்ட சண்டை அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. நார்மலாக ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்து பிக் பாஸ் வரைக்கும் வந்த தனலட்சுமிக்கு கடைசி சில வாரங்களுக்கு முன்பு எவிக்ஷனாகி விட்டார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அசீம் தான் என்னுடைய அண்ணன் என்று பல பேட்டிகளிலும் பேசி இருந்தார். அதுபோல பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது தனலட்சுமிக்கும் விக்கிரமனுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டது. வெளியே வந்த பிறகு கூட அசீம் மற்றும் தனலட்சுமி இருவரும் சேர்ந்து விக்ரமனை அட்டாக் பண்ணுவது போலவே போஸ்ட் போட்டுக் கொண்டிருந்தனர்.

தனலட்சுமியின் வருங்கால கணவர்

இந்த சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனலட்சுமி பெரிதாக டிவி நிகழ்ச்சிகளிலோ, திரைப்படங்களிலோ வரவில்லை. ஏற்கனவே டிக் டாக் மூலம் பிரபலமான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் சோசியல் மீடியாவில் மட்டும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் நேற்று அவருக்கு வினோத் என்பவர் உடன் எங்கேஜ்மென்ட் நடந்திருக்கிறது. திருமணம் எப்போது என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் எங்கேஜ்மென்ட் போட்டோவை பகிர்ந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் வாழ்த்து

ஏற்கனவே நேற்று அனிருத் மற்றும் காவியா மாறன் திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல ப்ரியா பவானி சங்கர் அவருடைய நீண்ட நாள் காதலனை எளிமையாக திருமணம் செய்ததும் பெரிதாக பேசப்பட்டது. இதற்கிடையே தனலட்சுமி தன்னுடைய எங்கேஜ்மென்டை சிம்பலாகவே முடித்திருக்கிறார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எங்கேஜ்மென்ட் செய்திருக்கிறார். இவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+