அருள் விக்னேஷ் எம்எல்ஏவுக்கு எதிராக களமிறங்கிய திமுக.. ஆர்எஸ் பாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார்

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியதாகவும் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மற்றும் ஆட்சியருக்கு பாதுகாப்பு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும், மதுபோதையில் கலெக்டரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தொந்தரவு செய்ததாகவும் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

Arul Vignesh

எம்எல்ஏ அருள் விக்னேஷ்

எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆட்சியருக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதோடு, மது போதையில் அவரது வீட்டிற்கே சென்று அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த புகார்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காட்டமான கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

அந்தவகையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இந்தப் புகார் மனுவை டிஜிபி அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.

ஆர்எஸ் பாரதி

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, "கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரில் சிபிசிஐடி விசாரணை தேவை. ஒரு பெண் ஆட்சியருக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தான சூழ்நிலை, 77 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை எப்போதும் நடந்ததில்லை, அரசு அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்கிற சூழல் தவெக ஆட்சியில் நிலவுகிறது.

எங்களின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். கையில் அதிகாரம் இருப்பதன் காரணமாக தவெகவினர் துணிச்சலாக தவறு, குற்றங்களை செய்து வருகிறார்கள். வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதுடன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று ஆர்எஸ் பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தப் புகார்களை எடுத்துரைத்து, பெண் அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருந்த நிலையில் திமுக சார்பில் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவிலும் புகார்

அதேபோல, பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தென்சென்னை (வடக்கு மேற்கு) மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆர். த்ரிசூலி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு இந்தப் புகார் மனுவை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+