மத்திய அரசு பள்ளியில் வேலை.. பிளஸ் டூ, டிகிரி முடிச்சவங்களும் விண்ணப்பிக்கலாம்.. செம சான்ஸ்
சென்னை: தூத்துக்குடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பள்ளியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர், பிரைமரி ஆசிரியர், டைப்பிஸ்ட் என பல்வேறு பதவிகளில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பிளஸ் டூ மற்றும் டிகிரி முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பழையகாயலில் மத்திய அரசுக்கு சொந்தமான AECS பள்ளி இயங்கி வருகிறது. AECS என்பது இந்தியா முழுவதும் அணுசக்தி கல்விச் சங்கத்தால் (AEES) நடத்தப்படும் ஒரு பள்ளியாகும். இது முதன்மையாக அணுசக்தித் துறை (DAE)யில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளுக்காக இந்த பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
பட்டதாரி ஆசிரியர் - கணிதம், இயற்பியல், பயாலஜி, கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், கலை, பி.இ.டி., தமிழ், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
பிரைமரி டீச்சர் (PRT), டைப்பிஸ்ட், பால்வதிகா ஆசிரியர் ஆகிய பிரிவுகளிலும் பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டிகிரி கல்வித் தகுதியுடன் பி.எட் முடித்து இருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும். ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பி.இ.டி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சி கல்வியில் 4 ஆண்டுகள் கொண்ட ஒருங்கிணைந்த படிப்பு அல்லது பி.பி.எட் முடித்து இருக்க வேண்டும். 50 சதவீதத்திற்கு குறையாத மதிப்பெண்களில் தேர்ச்சி அவசியம்.
டைப்பிஸ்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தகுதியுடன் டைப்பிங் திறன் அவசியம். ஒரு நிமிடத்திற்கு குறைந்தது 35 வார்த்தைகள் அடிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 65 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். டைப்பிஸ்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
TGT - மாதம் ரூ. 34,125/-
PRT - மாதம் ரூ. 27,625/-
பால்வதிகா ஆசிரியர் - மாதம் ரூ. 27,625/-
LDC (தட்டச்சு செய்பவர்) - மாதம் ரூ. 19,900/-
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பழையகாயலில் உள்ள AECS பள்ளிக்கு சென்று விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.aecspazhayakayal.edu.in என்ற இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யலாம்.
தேவையான விவரங்களை பூர்த்தி செய்து கல்வி நகலுடன் இணைத்து
AECS, Pazhayakayal,
Zirconium Complex,
Pazhayakayal P.O., Eral Taluk,
Thoothukudi - 628 152
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வரும் 03-03-2026 கடைசி நாளாகும். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன் தேர்வு அறிவிப்பை முழுமையாக படித்து உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பை படிக்க:
http://www.aecspazhayakayal.edu.in/2026-27/Recruitment_Notification.pdf
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications