அரசு வேலை! 6 ஆயிரம் பணியிடம்.. கை நிறைய சம்பளம்.. பட்டதாரிகள், பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி தகுதி என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப்பள்ளிகள் (EMRS) நடத்தப்படுகின்றன. நாடு முழுவதும் சுமார் 400 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் 8 ஏகலைவா மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள், விடுதி வாடர்ன்கள், நூலகர் உள்ளிட்ட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

காலிப்பணியிடங்கள்: பட்டதாரி ஆசிரியர்கள் (5,660), விடுதி வார்டன் (ஆண்-335), விடுதி வார்டன் (பெண்-334) என மொத்தம் 6,329 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தி, ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், அறிவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
ஆசிரியர் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடம் சார்ந்த இளங்கலை பட்டப்படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். இசை, நுண்கலை, உடற்பயிற்சி, நூலகர் பணிக்கு துறை சார்ந்த பட்ட படிப்பு படித்திருக்க வேண்டும். வார்டன் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும். எனினும், அரசு விதிகளின் படி வயது வரம்புகளில் தளர்வும் உண்டும். அதாவது ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வும், எஸ்/எடி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வும் உண்டு.
தேர்வு முறை எப்படி?: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, மொழி திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சென்னையில் தேர்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த பதவிகளுக்கான விண்ணப்பிக்க வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி கடைசி நாளாகும்.
சம்பளம் எவ்வளவு?: பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Rs.44900 - 142400/-) வரையும், இசை, நுண்கலை, PET- ஆகிய பணிகளுக்கு (Rs. 35400- 112400) வரை சம்பளம் வழங்கப்படும். விடுதி வார்டன் பகுதிகளுக்கு (Rs. 29200 - 92300) வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். வார்டன் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிப்பது எப்படி: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட முழுமையான தகவல்களை https://emrs.tribal.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications