மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 60 ஆயிரம் வரை சம்பளம்.. டிப்ளமோ, டிகிரி முடிச்சவங்க விட்றாதீங்க!
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்-இல் (ஆர்.சி.எஃப்.எல்) 188 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பிஎஸ்சி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை, மாதம் ரூ.60 ஆயிரம் வரை வழங்கப்படும்.
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அன்ட் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட் (ஆர்.சி.எஃப்.எல்) என்பது இந்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத் துறைக்கு உட்பட்ட பொது துறை நிறுவனம் ஆகும். கடந்த 1978-ல் நிறுவப்பட்ட இதன் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இது யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் பல்வேறு தொழில்துறை ரசாயனங்களை உற்பத்தி செய்து, விவசாய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

பணியிடங்கள் விவரம்:
தற்போது இந்த நிறுவனத்தில் ஆபரேட்டர் (கெமிக்கல்) பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 188 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி
ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.எஸ்சி(வேதியியல்) முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் வேதியியலில் பட்டம் பெற்றவர்கள் தேசிய தொழிற்கல்வி பயிற்சி கவுன்சில் (NCVT) நடத்தும் அட்டன்டன்ட் ஆபரேட்டர் (கெமிக்கல் பிளான்ட்) அதாவது AO(CP) வர்த்தகத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.02.2026 அன்று நிலவரப்படி கணக்கிடப்படும். பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது 30 ஆண்டுகள் ஆகும். எஸ்.டி/எஸ்.சி பிரிவினர் 5 ஆண்டுகள், ஓ.பி.சி (NCL) பிரிவினர் 3 ஆண்டுகள் வரை உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் ஆபரேட்டர் (கெமிக்கல்) பயிற்சிப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.22,000 முதல் ரூ.60,000/ வரை சம்பளம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு ஊதிய உயர்வு மற்றும் பிற சலுகைகள் உண்டு.
தேர்வு முறை
முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில் தகுதி பெறுபவர்கள் அடுத்ததாக திறனறித் தேர்வுக்கு (Skill Test) அழைக்கப்படுவார்கள். இரண்டு தேர்வுகளிலும் பெறும் ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்
பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.டி/எஸ்.சி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.700/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rcfltd.com/ இல் வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 27 அன்று மாலை 5:00 மணி ஆகும்.
-
IT Jobs: சென்னை - பெங்களூர் உள்பட 3 இடங்களில் நாளை இண்டர்வியூ.. TCS-யில் காலிப்பணியிடங்கள் -
IT Jobs: அரியர்ஸ் இருந்தாலும் வேலை.. ஏப்ரல் 13ம் தேதி சென்னை எச்சிஎல்-யில் இண்டர்வியூ -
IT JOBS: 2026ல் படிப்பை முடித்தோருக்கு ஜாக்பாட்.. அலோவன்ஸ் + சம்பளத்துடன் வேலை தரும் Cognizant -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 18 ம் தேதி சென்னையில் இண்டர்வியூ -
இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை.. 350 பணியிடங்கள்.. பிஇ முடித்தவங்களுக்கு ஜாக்பாட் -
இந்திய நர்ஸை.. ஆண்ட்டி என்று அழைத்த நபர்! நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு! -
Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. 3-ம் கட்ட கலந்தாய்வு எப்போது? -
1.4 கோடி வரை சம்பளம்.. வீடியோ கேம் விளையாட தெரிந்தால்.. அமெரிக்காவில் லட்டு மாதிரி வேலை -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!














Click it and Unblock the Notifications