மத்திய உளவுத்துறையில் வேலை.. மாதம் 56,000 சம்பளம்.. சென்னையில் பணியிடங்கள்.. விட்றாதீங்க
சென்னை: மாதம் ரூ.56 ஆயிரம் சம்பளத்தில் மத்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையிலும் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் என்பனவற்றை இங்கு பார்க்கலாம்.
ஐபி (Intelligence Bureau) எனப்படும் மத்திய உளவுத்துறை நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாத அமைப்புகளில் ஒன்றாக உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறை சட்டம் ஒழுங்கு உள்பட உள்நாட்டு பாதுகாப்புக்கு தேவையான தகவல்களை முன்கூட்டியே திரட்டி, அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு அமைப்பாக உள்ள உளவுத்துறையில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாட்டில் முக்கிய நகரங்களில் செயல்படும் உளவுத்துறை அலுவலகத்தில் காலியாக உள்ள மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் - 362 பணியிடங்கள்
மண்டல வாரியாக சென்னை - 10 இடங்கள், அகர்தலா - 06, அகமதாபாத் - 11, டெல்லி/ஐபி தலைமையகம் - 108, காங்டாக் - 08 என மொத்தம் 362 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
14.12.2025 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்ச வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்:
தேர்வு செய்யப்படும் எம்டிஎஸ் பணியாளர்களுக்கு மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் லெவல் 1 படி மாதம் ரூ.18,000- ரூ.56,900 வரை சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
தேர்வு முறையை பொறுத்தவரை டயர் 1, டயர் 2 என இரண்டு கட்ட எழுத்து தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம் ஆகும். தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
https://www.mha.gov.in/en என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள் 22.11.2025 ஆகும்.
* விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2025 ஆகும்.
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mha.gov.in/en












Click it and Unblock the Notifications