மத்திய அரசு ஊழியர் ஆகணுமா? அதுவும் சென்னையிலே பணியிடம்! 63 ஆயிரம் சம்பளம்.. 10ம் வகுப்பு தகுதிதான்
சென்னை: மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஸ்டெனோகிராபர், ஜூனியர் செயலக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்தவர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.63 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) சென்னை கிண்டியில் உள்ளது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. நாட்டின் முதன்மையான தோல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாக உள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கை நிறைய சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவைகள் கிடைக்கும்.

பணியிடங்கள் விவரம்:
இந்த நிறுவனத்தில் காலியாக இருக்ககூடிய 13 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் - 01
* ஜூனியர் செயலக உதவியாளர் - 02
* ஜூனியர் செயலக உதவியாளர் - 03
* ஜூனியர் செயலக உதவியாளர் - 01
* எம்.டி.எஸ் - 06 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணிக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஸ்டேனோகிராபி தெரிந்து இருப்பது அவசியம்.
* செயல உதவியாளர் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி பற்றிய அறிவும், டைப்பிங் திறனும் பெற்று இருக்க வேண்டும்.
* மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ தேர்ச்சி போதுமானது.
* கல்வித்தகுதி பற்றிய முழுமையான மற்றும் விரிவான விவரங்களை தேர்வர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு:
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் - ரூ.19,900 - ரூ.63,200/-
* ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) - ரூ.19,900 - ரூ.63,200/-
* பல்நோக்குப் பணியாளர் - நிலை-1 ரூ.18,000 - ரூ.56,900/-
வயது வரம்பு:
* ஜூனியர் ஸ்டெனோகிராபர் - 27 வயது (அதிகபட்சம்)
* ஜூனியர் செயலக உதவியாளர் - 28
* மல்டி-டாஸ்கிங் பணியாளர் - 25
* அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை:
போட்டித்தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதிசெய்து கொண்ட பிறகு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தேர்வர்கள் https://clri.org/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 22.02.2026. கடைசி நாளாகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://clri.org/careers.aspx
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications