சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வர்களுக்கு அரசே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கு, தேர்வு குறித்து புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. குரூப் தேர்வுகள் எப்படி இருக்கும், எப்படி தயாராக வேண்டும் என்பதை அறிந்து, தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் நடைபெற போகிறது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 20ம் தேதி, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் குறித்து அறிவிப்பாணை வெளியிட்டது. இதுபற்றி வெளியான அறிவிப்பின் படி, "தமிழ்நாட்டின் அரசு துறைகளில் உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தனிப்பிரிவு அலுவலர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் என 507 குரூப் 2 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

jobs TNPSC Group 2 2

இதேபோல் மேலாண்மை இயக்குநரின் நேர்முக உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், மேற்பார்வையாளர், இளநிலைக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,820 குரூப் 2ஏ பணியிடங்களுக்கும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக குரூப் 2, குரூப் 2 ஏவில் 2,327 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு 14.9.2024 அன்று நடைபெற போகிறது. இந்த தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் நாளை மறுநாளுக்குள் (ஜூலை 19ம் தேதிக்குள்) விண்ணப்பிக்க வேண்டும்.

1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க அதிகபட்சம் பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற பிரிவினர் 42-க்குள்ளும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி கல்வி தகுதி உள்ளது. எனினும் பொதுவாக ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் உயர்நிலை, மேல்நிலைப் படிப்பகளில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்

முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் வனவர் பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் உடற்திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்" இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பிக்க போகிறவர்கள், இந்த தேர்வுகள் குறித்து நன்கு புரிந்து கொள்ள அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. குரூப் தேர்வுகள் பற்றி பயிற்சி வகுப்புகளை அரசே நடத்துகிறது. கிண்டியில் இதற்கான பயிற்சிகள் நாளை முதல் தொடங்குகிறது.

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-2-விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப்-2ஏ-விற்கு ஆயிரத்து 820 பணியிடங்களும் என மொத்தமாக 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

90×20 .. 1800 டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மெயின் தேர்வு எப்படி இருக்கும்.. தேர்வர்களே நோட் பண்ணுங்க


குரூப்-2, 2 ஏ-விற்கான முதல் நிலைத்தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை கிண்டியிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் (திங்கள் முதல் வெள்ளி வரை) நடத்தப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தேர்விற்கு விண்ணப்பம் செய்ததற்கான விண்ணப்ப நகல், ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை கிண்டியிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+