ரெடியா? சென்னையை சேர்ந்தவரா நீங்க? வேலைவாய்ப்பு- பயிற்சி ஆணையரகத்தில் அசத்தலான வேலை!
சென்னை: சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் ஆணையரக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
சென்னை கிண்டியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் உள்ளது. இந்த ஆணையரகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காவலர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் குறைந்தபட்சமாக 18 வயதுக்குள்ளும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். மேலும் பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பிரிவினர் 34 வயதுக்குள்ளும், ஆதிதிராவிட வகுப்பினர், பழங்குடியினர் பிரிவினர் என்றால் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பம் வாங்க வேண்டும். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அரசு பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் (நிர்வாகம்), வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு), எண்.42, ஆலந்தூர் ரோடு, திருவிக தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பம் வாங்க வேண்டும்.
இவ்வாறு வாங்கும் விண்ணப்பங்களை 30ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தியிட்டு வழங்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி அலுவலக உதவியாளர் பணிக்கு 6 பேரும், காவலர் பணிக்கு 2 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்வோர் நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இருப்பினும் பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் நல்ல சம்பளம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் பணிக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை.. 40 ஆயிரம் சம்பளம்! டிகிரி முடிச்சவங்க தட்டி தூக்கலாம் -
IT Jobs: நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இண்டர்வியூ.. அனுபவம் வேண்டாம்.. அழைக்கும் HCL -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications