‛‛மொழிப்பெயர்ப்பாளர் வேலை’’.. ரூ.56,100 டூ 2.05 லட்சம் வரை மாதசம்பளம்! அழைக்கும் சென்னை ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்கள் நேரடியாக நிரப்பப்பட உள்ளனர். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தொடக்கத்திலேயே மாதம் ரூ.56,100 முதல் அதிகபட்சமாக ரூ.2.01 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தமிழக உயர்நீதிமன்றம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதோடு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்துள்ளது. இந்நிலையில் தான் உயர்நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளோடு நிரப்பப்பட்டு வருகிறது.

chennai high court job jobs

அந்த வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மொழிப்பெயர்பாளர் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய அறிவிப்பின்படி மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு 5 பேர், மொழிப்பெயர்கள் (இந்தி), மொழிப்பெயர்கள் (கன்னடா), மொழிப்பெயர்கள் (மலையாளம்) பணிக்கு தலா ஒருவர் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பணி வாரியாக பார்த்தால் மொழிப்பெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் தெலுங்கு) பணிக்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப்பெயர்த்து எழுதவும், படிக்கவும் செய்ய தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலும் இருந்து தமிழிலும், தெலுங்கில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தெலுங்கு மொழியிலும் மொழிப்பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

மொழிப்பெயர்ப்பாளர் (இந்தி) பணியாளர் பணிக்கு டிகிரி படிப்பை ஆங்கிலம், இந்தி பாடத்துடன் முடித்திருக்க வேண்டும். அதோடு இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும் மொழிப்பெயர்க்கவும், எழுதவும் படிக்கவும், தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் இந்தியில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து இந்தியிலும், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப்பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

மொழிப்பெயர்ப்பாளர் (கன்னடா) பணிக்கு டிகிரி படிப்பை ஆங்கிலம் மற்றும் கன்னடா மொழியுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் கன்னடாவில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து கன்னடாவிற்கும் மொழிப்பெயர்ப்பு செய்ய தெரிந்திருப்பதோடு, அந்த மொழிகளில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் பயிற்சி காலத்தில் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் கன்னடாவில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து கன்னடாவிற்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கான மொழிப்பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

மொழிப்பெயர்ப்பாளர் (மலையாளம்) பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு டிகிரி படிப்பை ஆங்கிலம், மலையாளம் மொழியுடன் படித்து முடித்திருக்க வேண்டும். மேலும் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்திலும், தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிலும் மொழிப்பெயர்க்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த மொழிகளில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு பணிக்கு தேர்வாகும் நபர்கள் பயிற்சி காலத்தில் தமிழக அரசு பணியாளர் ஆணையம் சார்பில் மலையாளத்தில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து மலையாளத்துக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கான மொழிப்பெயர்ப்பு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.

மாதசம்பளம் - வயது வரம்பு: இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதசம்பளமாக குறைந்தபட்சம் ரூ.56,100 வழங்கப்படும். அதிகபட்சம் என்றால் ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் பொதுப்பிரிவினர் 32 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்சி/எஸ்சி(ஏ)/எஸ்டி, எம்பிசி அண்ட் டிசி/பிசி/பிசிஎம் என்றால் 37 வயதுக்குள்ளும், தமிழக நிதி அமைச்சக பணி அல்லது சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் பணியாற்றுவோர் என்றால் 47 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். முன்னாள் படை வீரர்கள் என்றால் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in இணையதளம் மூலம் ஜுலை மாதம் 27 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணம் என்பத ஜுலை 30ம் தேதிக்குள் விண்ணப்பம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் என்பது பிசி, பிசிஎம், எம்பிசி, டிசி, மற்றும் பிற பிரிவினர்களுக்கு ஒவ்வொரு பதவிக்கும் ரூ.1000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சி(ஏ) மற்றும் எஸ்டி பிரிவினர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என்றாலும் விண்ணப்ப கட்டணம் என்பது கிடையாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பம் ஏற்கப்படாது.

இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் 100 மதிப்பெண்களுக்கான முதன்மை தேர்வு (ஓஎம்ஆர் மறை), அதன்பிறகு 100 மதிப்பெண்களுக்கான மெயின் தேர்வு அதன்பிறகு 25 மதிப்பெண்ணுக்கான Viva Voce நடத்தப்படும். இதில் தேர்ச்சி அடைபவர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான கூடுதல் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+