Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.71,900 சம்பளம்! சென்னை ஹைகோர்ட்டில் டைப்பிஸ்ட், டெலிபோன் - ஜெராக்ஸ் ஆபரேட்டர், கேஷியர் வேலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள டைப்பிஸ்ட், டெலிபோன் ஆபரேட்டர், கேஷியர் உள்பட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் அதிகபட்சமாக ரூ.71,900 ஆயிரம் சம்பளத்தில் பணியை பெற முடியும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 4 பிரிவுகளில் காலியாக உள்ள 33 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு:

 Chennai High Court recruitment for 33 vacancy including Typist and Telephone Operator

டைப்பிஸ்ட்: இந்த பணிக்கு மொத்தம் 22 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி, என்ஜினீயரிங் முடித்து தமிழ், ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் ஹையர் முடித்திருக்க வேண்டும். அதோடு ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒருவேளை ஆபிஸ் ஆட்டோமேஷன் கம்ப்யூட்டர் படிப்பை முடிக்காதவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் பயிற்சி காலத்தில் அதனை முடிக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 + SPL Pay வழங்கப்படும்.

டெலிபோன் ஆபரேட்டர் - கேஷியர்: டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு ஒருவரும், கேஷியர் பணிக்கு 2 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள். டெலிபோன் ஆபரேட்டர் பணிக்கு மாதம் சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 + SPL Pay வழங்கப்படும். கேஷியர் பணிக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வழங்கப்படும்.

ஜெராக்ஸ் ஆபரேட்டர்: இந்த பணிக்கு மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு செலக்ட் ஆகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சமாக ரூ.16,600 முதல் அதிகபட்சமாக ரூ.60,800 வரை வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, எம்பிசி, டிசி, பிசி, பிசிஎம் பிரிவினர் என்றால் 37 வயதுக்குள்ளும், சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வேலை செய்வோராக இருந்தால் 47 வயதுக்குள்ளும், முன்னாள் படை வீரர்கள் என்றால் 55 வயது வயதுக்குள்ளும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது வரை தளர்வு என்பது வழங்கப்படும். வயது வரம்பு என்பது 01.07.2024 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் பிப்ரவரி மாதம் 13ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.50 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் என்றால் கட்டணம் கிடையாது. இப்படி விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+