டிகிரி முடிச்சிருக்கீங்களா.. சென்னை ஹைகோர்ட்டில் வேலை! ரூ.2 லட்சம் வரை சம்பளம்.. விட்றாதீங்க
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 68 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்சேர்ப்பு வாரியம் இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. எட்டாம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு தொழிலாளர், தோட்டக்காரர் என மொத்தம் 392 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

அதே போல, டிகிரி கல்வி தகுதி கொண்ட தனி உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 67 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* நீதிபதிகளுக்கான தனிப்பட்ட உதவியாளர் - 28
* பதிவாளர் (பொது) தனிப்பட்ட செயலாளர் - 01
* (பதிவாளர்களுக்கான) தனிப்பட்ட உதவியாளர் - 14
* (துணைப் பதிவாளர்களுக்கான) தனிப்பட்ட எழுத்தர் - 04 என மொத்தம் 67 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். அதுபோக, டைப்-ரைட்டிங், ஷார்ட்ஹேண்ட் முடித்து இருக்க வேண்டும். அரசு நடத்தும் தொழில் நுட்ப நிலையத்தில் படித்து சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் Higher / Senior கிரேடு முடித்து இருக்க வேண்டும்.
ஷார்ட் ஹேண்டில் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகளும் தமிழ் ஷார்ட் ஹேண்டில் 90 வார்த்தைகளும் முடித்து இருக்க வேண்டும். டைப்பிங்கில் ஒரு நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். அது மட்டும் இன்றி தொழில் நுட்ப கல்வித்துறை இயக்குநரகம் நடத்தும் ஆபீஸ் ஆட்டோமேஷன் சான்றிதழ் வைத்து இருப்பது கட்டாயம்.
வயது வரம்பு:
01.07.2025 தேதிப்படி, 01.07.2007 க்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதாவது விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். எஸ்சி / எஸ்டி, எம்பிசி, பிசி, பிசிஎம் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். பொதுப்பிரிவினர் என்றால் அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
* நீதிபதிகளுக்கான தனிப்பட்ட உதவியாளர் - ரூ.56,100 - 2,05,700/-
* பதிவாளர்(பொது) பெர்சனல் செயலாளர் - ரூ.56,100 - 2,05,700/-
* பதிவாளர்களுக்கான பெர்சனல் உதவியாளர் - ரூ.36,400 - 1,34,200/-
* தனிப்பட்ட எழுத்தர் (துணைப் பதிவாளர்களுக்கு) - ரூ.20,600 - 75,900/-
தேர்வு முறை:
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து தெரிந்து கொள்வது அவசியம். எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
* நீதிபதிகளின் தனி உதவியாளர் பணிக்கு: தேர்வுக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த முடியும்.
* துணை பதிவாளர்களுக்கான பெர்சனல் கிளர்க்: பணிக்கு தேர்வுக்கட்டணம் ரூ..1000/-
* பதிவாளர்களுக்கான தனி உதவியாளர் பணிக்கு: ரூ.800/-
விண்ணப்பிக்க வரும் 05.05.2025. கடைசி நாளாகும். தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பாதாரர்கள்
https://www. mhc.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.mhc.tn.gov.in/recruitment/login












Click it and Unblock the Notifications