சென்னை ஐசிஎப்: ரயில்வே நிறுவனத்தில் வேலை.. 1,010 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை: சென்னை ஐசிஎப் ரயில்வே நிறுவனத்தில் காலியாக உள்ள 1,010 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
ஐசிஎப் எனப்படும் இந்திய ரயில்பெட்டி தொழிற்சாலை சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ளது. இந்திய ரயில்வேக்கு தேவையான ரயில் பெட்டிகள் இந்த தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய ரயில்வே நிர்வாகத்தால் இந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வருகிறது. ஐசிஎப்-பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்பு வெளியிட்டு, பணி நியமனங்கள் நிரப்பப்படுகின்றன.

அதேபோல அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களுக்கும் அவ்வப்போது ஆட்தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 1,010 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஐசிஎப் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..
பணியிடங்கள் விவரம்: கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர் உள்பட 9 வகையான பிரிவுகளில் மொத்தம் 1010 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பயிற்சி பணியிடங்களுக்கு பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் (என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை) விண்ணப்பிக்கலாம்.. கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்..
வயது வரம்பு: 21-6-2024 தேதிப்படி ஐ.டி.ஐ. படித்தவர்கள் 15 வயது நிரம்பியவர்களாகவும், 24 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிக்காதவர்கள் 15 வயது நிரம்பியவர்களாகவும், 22 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வும் உண்டு.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சி பணி வழங்கப்படும். ஊதியத்தை பொறுத்தவரை மாதம் ரூ6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். https://pb.icf.gov.in. என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் அதாவது மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 21-6-2024- கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறை படித்துக் கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க https://pb.icf.gov.in/act/notification.pdf இங்கே கிளிக் செய்யவும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications