சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்ற வேண்டுமா.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: சென்னை குரோம்பேட்டையில், வரும் நவம்பர் 29-ந் தேதி ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சிக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ள சென்னை மாநகர மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
ஐடிஐ முடித்த இளைஞர்கள் தொழில் பழகுனர் பயிற்சி பெற விரும்புவார்கள். பொதுவாக ஐடிஐ பயின்று தேர்ச்சி பெற்று திறன் (Semi skilled) வாய்ந்தவர்களை தொழிற் நிறுவனங்களில் செய்முறை பயிற்சி வழங்கி திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்குவதே தொழிற் பழகுநர் பயிற்சியின் நோக்கமாக உள்ளதுது. இத்திட்டம் ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கும் தொழிற் சாலைகளின் திறன் தேவைகளுக்கும் உள்ள இடைவெளிக்கு பாலமாக இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை பொறுத்தவரை ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 2.5ரூ முதல் 15ரூ வரை தொழிற் பழகுநர்களை ஈடுபடுத்த வேண்டியது சட்டமாகும். தொழிற் பழகுநர் சட்டத்தின்படி பயிற்சிக்கான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட சுய விருப்பத்தின் பேரில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டாயமாக பணிபுரியும் நிறுவனங்களில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்க வேண்டும்.
அந்த வகையில் மத்திய அரசு துறைகள் மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், மாநில அரசு துறைகள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஐடிஐ படித்தவர்கள் பயிற்சிக்கு சேர்க்கப்படுகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மின்வாரிய கழகம், போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, தமிழ்நாடு குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியம் உள்பட பல்வேறு நிறுவனங்களை அப்பரண்டீஸ் பயிற்சி தருகிறது. அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்பரண்டீஸ் ஆக சேர வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவர்களுக்கான வாய்ப்பு வந்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒரு வருடம் ஐ.டி.ஐ. தொழில் பழகுனர் பயிற்சி (அப்பரண்டீஸ்) அளிக்கப்பட உள்ளது.
இந்த தொழில் பழகுனர் பயிற்சி பெற தகுதியான ஐ.டி.ஐ. பிரிவுகளில் (மோட்டார் மெக்கானிக்கல் வெகிகிள், மெக்கானிக் டீசல், எலெக்ட்ரீஷன் அன்ட் வெல்டர்) தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications