8ம் வகுப்பு பாஸா நீங்க? அழைக்கும் சமூக நலத்துறையின் ஒன் ஸ்டாப் சென்டர்! சென்னையிலேயே பணி
சென்னை: வடசென்னை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் இயங்கும் ஒன் ஸ்டாப் சென்டரில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சமூக நலத்துறையின் கீழ் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் ‛ஒன் ஸ்டாப் சென்டர்' இயங்கி வருகிறது. வன்முறையால் பாதிக்கப்படும்பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர உதவிகள் வழங்கும் நோக்கத்தில் இந்த சென்டர் இயங்கி வருகிறது.

மாவட்ட வாரியாக ‛ஒன் ஸ்டாப் சென்டரில்' காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்சென்னை மாவட்ட ஒன் ஸ்டாப் சென்டரில் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி Case Worker பணிக்கு 3 பேர், Security பணிக்கு ஒருவர், Multi Purpose helper பணிக்கு 2 பேர் என மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் Case Worker பணிக்கு விண்ணப்பம் செய்வோர் இளங்கலை பட்டப்படிப்பை Social Worker பிரிவில் முடித்திருக்க வேண்டும்.
அதோடு மேலாண்மை வளர்ச்சியில் உளவியல் ஆலோசகர் Counselling Psychology அல்லது Development Management பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு அல்லது அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டம் சார்ந்த அமைப்பில் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பம் செய்வோர் 35 வயதுக்குள்ளும் உள்ளூரை சேர்ந்தவராகவும்,வாகனம் ஓட்ட தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
செக்யூரிட்டி பணிக்கு ஆண் மற்றம் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டு்ம. மாதசசம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மல்டி பர்பஸ் ஹெல்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 8 ம்வகுப்பு பாஸ் அல்லது 10ம் வகுப்பு பெயில் ஆகியிருப்பதோடு சமையல் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்குள் உள்ளூரை சேர்ந்தவர்கள் தான் சேர்ந்தவர்கள் தான் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 13ம் தேதி மாலை 5 மணிக்கள் https://chennai.nic.in/ எனும் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வழங்க வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 01 என்ற முகவரிக்கு நேரில் அல்லது ஸ்பீட் போஸ் முறையில் அனுப்பலாம்.
இல்லாவிட்டால் [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
பணி தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பை காண Click Here
பணிக்கான விண்ணப்பம் டவுன்லோட் செய்ய Click Here
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications