அஞ்சல் துறையில் அருமையான சான்ஸ்.. 10 வகுப்பு படித்தால் போதும்.. நாளை சென்னையில் நேரடி இண்டர்வியூ
சென்னை: சென்னையில் தபால்துறை சார்பில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்கான முகவர்களை நியமிக்க ஜனவரி 30ம் தேதி ( நாளை) நேர்காணல் நடைபெற உள்ளது. 10 வகுப்பு படித்த யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என தபால் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் , அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை நியமிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவராக வேண்டும் என்றால் பட்டதாரியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.
10 வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது நிறைவு பெற்ற யார் வேண்டுமானாலும் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவராக மாற முடியும். மேற்கண்ட தகுதி உடைய சுயதொழில் செய்யும், வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள், முகவர்கள், அங்கன்வாடி, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் தராளமாக இந்த பணிக்கு நேரில் போய் விண்ணப்பிக்கலாம்.
இதில் கீழ்கண்ட கூடுதலாக சில தகுதி இருந்தால் உடனே விரும்புவார்கள்.. ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன்அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள், சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருந்தால் தாராளமான நாளை நேர்காணலில் பங்கேற்கலாம்.
அதேநேரம் இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதி கிடையாது. நேர்காணலில் பங் கேற்க விரும்புபவர்கள் 3 பாஸ்போர்ட் அளவு புகைப் படம், அசல் மற்றும் இரண்டு நகல் -வயது, முகவரி மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக முகவர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் செயின்ட் தாமஸ் மவுண்ட் தலைமை அஞ்சலகம், சென்னை- 600 016-ல் உள்ள அலுவலகத்தில் ஜனவரி 30-ம் தேதி (அதாவது நாளை ) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக மாறி நன்றாக சம்பாதிக்க முடியும்.
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications