சென்னை இளைஞர்களுக்கு அழைப்பு.. ஊர்காவல் படையில் சேர விருப்பமா? உடனே இதை பண்ணுங்க
சென்னை: போலீசுக்கு உதவியாக இயங்கி வரும் ஊர்காவல்படையில் சேர சென்னை இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் சேர 10ம் வகுப்பு வரை பயின்றிருந்தால் போதும். இந்த வாய்ப்பை சென்னை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்தியா-சீனா போருக்கு பின்னர், காவல்துறையினருக்கு உதவும் நோக்கில் 1962ல் உருவாக்கப்பட்டதுதான் ஊர்காவல்படை. இப்படையில் உள்ளவர்கள் போலீசாருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஊர்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில், "சென்னை பெருநகர ஊர்காவல்படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னை பெருநகர ஊர்க்காவல்படையில் சேர விரும்புவோர் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் குற்றப்பின்னணி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்கவேண்டும் குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்கவேண்டும் தேர்ச்சி செய்யப்படும் ஊர்காவல்படையினர்களுக்கு 45 நாட்கள் தினசரி 1 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடித்த பின்னர் அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
சலுகைகள் : சீருடை, தொப்பி, காலணி ஆகியவை வழங்கப்படும். இரவு ரோந்துபணி, பகல் ரோந்துபணி மற்றும் போக்குவரத்து பணிக்கு ரூ.560/-ம் சிறப்பு படியாக வழங்கப்படும். பெண்களுக்கு பகல் ரோந்து பணி மட்டுமே.
வெகுமதிகள்: சிறப்பாக மெச்சத் தகுந்த வகையில் பணிபுரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் ஜனாதிபதி பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரியில் 14.11.2024 முதல் இலவசமாக பெற்று பூர்த்திசெய்து 23.12.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.
முகவரி: சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை - 15. தொடர்புக்கு, :94981 35190, 95667 76222" என்கிற எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications