சென்னை - கோவையில் வேலை.. ரூ.6.75 லட்சம் வரை சம்பளம்.. ஏப்ரல் 22 கடைசி நாள்.. அழைக்கும் Cognizant
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆண்டுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.6.75 லட்சம் வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
பிரபல ஐடி நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது Fresher hiring for 2025 Engineering Graduates (GenC Next, GenC Pro & GenC) என்ற பெயரில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த பணிக்கு 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் உள்ளிட்ட பிரிவில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பிரிவில் லெதர் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் GenC பணிக்கு என்றால் கோடிங் ஸ்கில்ஸ், ஃபுல் ஸ்டாக் எபிலிட்டி இருக்க வேண்டும்.அதேபோல் ஜாவா, C#, வெப் டெக்னாலஜிஸ் (எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட்), பைத்தான், ஆரக்கள், எஸ்க்யூஎல்/பிஎல்எஸ்க்யூஎல், கிளவுட்(ஏடபிள்யூஎஸ், அஜூர் மற்றும் ஜிசிபி) தெரிந்திருக்க வேண்டும். GenC என்றால் சைபர் செக்யூரிட்டி, ஆரக்கள், சேல்ஸ் போர்ஸ், முல்சாப்ட், பெகா, சாப் ஏபிஏபி, எஸ்ஏபி பேசிஸ் உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2, டிப்ளேமா, யுஜி மற்றும் பிஜி உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது. எந்த லோகேஷன் என்றாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு பதிவு செய்வோருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் இருக்க வேண்டும்.
அதேபோல் கல்லூரி ஐடி கார்டு இருந்தால் அதையும் அப்லோட் செய்ய வேண்டும். மேலும் கல்லூரி/பள்ளி, யுஜி மற்றும் பிஜி மார்க்ஷீட் மற்றும் புரொவிஷனல்/டிகிரி சர்ட்டிபிகேட் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பான் கர்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பெயர் விபரம் சரியாக இருக்க வேண்டு்ம. வொட்டர் ஐடி/பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.6.75 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும். இன்னம் 6 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்ளிட்ட 9 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் தமிழ்நாட்டின் சென்னை, கோவையிலும் பணி செய்யும் வாய்ப்பு என்பது கிடைக்கும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications