Cognizant ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. BCA - B.sc முடித்தோருக்கு சூப்பர் சான்ஸ்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
பிரபல ஐடி நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது டிரெய்னிட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2022, 2023 அல்லது 2024 ஆகிய ஆண்டுகளில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதாவது பிசிஏ, பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது அலைட் ஸ்ட்ரீம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2, டிப்ளேமா, யுஜி மற்றும் பிஜி உள்ளிட்டவற்றில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.
காக்னிசண்ட் நிறுவனத்தின் எந்த நிறுவனமாக இருந்தாலும், எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் சரி பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீம் வொர்க், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் உள்ளிட்ட பல திறமைகள் இருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட் என்றால் அதற்கு அலோவன்ஸ் என்பது கிடைக்கும். அதேபோல் Cab வசதி இருக்கும். டாப் பெர்மானன்ஸ் காட்டுவோருக்கு ரிவார்ட்ஸ் இருக்கும். இருப்பினும்
தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
இந்த பணிக்கு பதிவு செய்வோருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை இணைக்க வேண்டும். அந்த போட்டோவின் பின்னணி என்பது லைட் நிறத்தில் இருக்க வேண்டும்.
அதேபோல் கல்லூரி ஐடி கார்டு இருந்தால் அப்லோட் செய்ய வேண்டும். மேலும் கல்லூரி/பள்ளி, யுஜி மற்றும் பிஜி மார்க்சீட் மற்றும் புரோவிஷனல்/டிகிரி சர்ட்டிபிகேட் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பான் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பெயர் விவரம் சரியாக இருக்க வேண்டும். வோட்டர் ஐடி/பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.
இந்த பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த 24ம் தேதி வெளியாகி உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications