அனுபவம் வேண்டாம்.. B.com, BA, B.sc உள்பட ஏதாவது டிகிரி போதும்.. Cognizant வேலைக்கு ஜன.,15 கடைசி நாள்
சென்னை: காக்னிசண்ட் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிக்கு பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், பிஎம்எஸ் உள்பட பிற படிப்பை முடித்து அனுபவம் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய ஜனவரி 15 கடைசி நாளாகும்.
முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் உள்ளது. இந்த ஐடி நிறுவனத்தில் அனலிஸ்ட் டிரெய்னி (Analyst Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது Freshersகளுக்கான வேலைவாய்ப்பாகும். எனவே பணி அனுபவம் தேவையில்லை.

இதனால் 2024, 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதன்படி பார்த்தால் பிசிஏ, பிஎஸ்சி, பிஏ, பிபிஏ, பிகாம், Bvoc, BMS உள்பட ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இதில் பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி (Allied Streams), கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியில், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். கண்டிப்பாக அரியர்ஸ் இருக்க கூடாது. இவர்கள் 10, பிளஸ் 2, டிப்ளமோ, இளநிலை பட்டப்படிப்பு உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோருக்கு டைம் மேனேஜ்மென்ட் ஸ்கில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனையை தீர்க்கும் திறன், அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ், டீமாக சேர்ந்து பணியாற்றும் திறமை உள்ளிட்டவை இருக்க வேண்டும். கிரிட்டிக்கல் திங்கிங் இருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் எந்த ஷிப்ட்டாக இருந்தாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட்டுக்கும் தயாராக இருக்க வேண்டும். நைட்ஷிப்ட் பார்ப்போருக்கு அலோவன்ஸ் உண்டு. அதேபோல் இந்தியாவில் எந்த நிறுவனத்தில் நியமனம் செய்யப்பட்டாலும் அங்கு சென்று பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
Cab வசதி உள்ளது. பிக்அப் - டிராப் வசதி தரப்படும். இது ஒரு PAN India பணியாகும். இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நியமனம் செய்யப்படலாம். தமிழகத்தில் சென்னை, கோவையிலும் இந்த நிறுவனத்துக்கு அலுவலகம் உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் இருப்பின் சென்னை, கோவையில் பணி கிடைக்கலாம். இதுதவிர பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, கொச்சி, புவனேஸ்வர், இந்தூர் உள்பட பல இடங்களில் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் இருக்கும்.
மேலும் தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜனவரி 15 கடைசி நாளாகும். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் தேதி முடிவதற்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்வோர் ரெஸ்யூம்(அதிகபட்சம் 2 பக்கம்) , பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும. கல்லூரி ஐடி கார்டு, பள்ளி, கல்லூரிக்கான மார்க் ஷீட் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். பார்ன் கார்டு இருக்க வேண்டும்.
பான் கார்டில் பெயர், அப்பா பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் இந்திய குடிமகன் என்பதை உறுதி செய்வதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இருக்க வேண்டும். காக்னிசண்ட்டில் கடந்த 6 மாதங்களில் இண்டர்வியூவில் பங்கேற்றவர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications