Cognizant வேலைவாய்ப்பு.. ஏப்ரல் 30 கடைசி நாள்.. சென்னை - கோவையில் பணி வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பம் செய்ய பணி அனுபவம் தேவையில்லை. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை உள்பட 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பிரபல ஐடி நிறுவனமாக காக்னிசண்ட் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து தற்போது அனலிஸ்ட் டிரெய்னி பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதுபற்றிய முக்கிய விபரங்கள் வருமாறு:

it jobs jobs job

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது டிரெய்னி அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2023 அல்லது 2024ம் ஆண்டில் டிகிரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

அதாவது பிசிஏ, பிஎஸ்சி என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கணிதம், இயற்பியல், வேதியியல், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் அல்லது அலைட் ஸ்ட்ரீம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் 10, பிளஸ் 2, டிப்ளேமா, யுஜி மற்றும் பிஜி உள்ளிட்டவற்றில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் படிப்பை முடித்திருக்க வேண்டும். அரியர்ஸ் இருக்க கூடாது.

அதேபோல் மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். டீம் வொர்க், பிரச்சனைகளை தீர்க்கும் திறன், ஸ்ட்ராங் அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் உள்ளிட்ட பல திறமைகள் இருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பின்படி மாதசம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

எந்த லொகேஷன் என்றாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு பதிவு செய்வோருக்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் இருக்க வேண்டும். அதேபோல் கல்லூரி ஐடி கார்டு இருந்தால் அதையும் அப்லோட் செய்ய வேண்டும். மேலும் கல்லூரி/பள்ளி, யுஜி மற்றும் பிஜி மார்க்சீட் மற்றும் புரோவிஷனல்/டிகிரி சர்ட்டிபிகேட் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்ய வேண்டும். பான் கர்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பெயர் விபரம் சரியாக இருக்க வேண்டும். வொட்டர் ஐடி/பாஸ்போர்ட் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஏப்ரல் 30ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா, புனே, மும்பை, கொச்சி, உள்ளிட்ட 8 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் தமிழ்நாட்டின் சென்னை, கோவையிலும் பணி செய்யும் வாய்ப்பு என்பது கிடைக்கும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+