ரூ.4 லட்சம் வரை சம்பளம்.. Cognizant ஐடி நிறுவனம் தரும் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஜூலை 15 கடைசி நாள்
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக Cognizant உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது கிராபிக் டிசைனர் (Graphic Designer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு 2024 அல்லது 2025ம் ஆண்டின் டிசைன் சம்பந்தமான படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
அதன்படி பார்த்தால் BFA, MFA, B.Des, M.DEs, BVA, MVA, விஸ்காம் (4 ஆண்டு), மாஸ் கம்யூனிகேஷன் (4 ஆண்டு) படித்திருக்க வேண்டும். இதுதவிர எம்ஏ, எம்எஸ்சி என்றால் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், மல்டிமீடியா, அனிமேஷன் உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும்.அதேபோல் 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, இளங்கலை, முதுகலை படிப்புகளை 50 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். 49.9 சதவீத மதிப்பெண் என்றாலும் அனுமதியில்லை. கல்லூரி படிப்பில் அரியர்ஸ் இருக்க கூடாது.
விண்ணப்பத்தாரர்களுக்கு விசுவல் டிசைன் பிரின்சிபிள் மற்றும் டிஜிட்டல் மீடியா அப்ளிகேஷன்ஸ் பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். போட்டோஷாப், இல்லுஸ்ட்ரேட்டர் மற்றும் பிற டிசைன் சாப்ட்வேர் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அனலிட்டிக்கல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறமை இருக்க வேண்டும். GenAI டூல்ஸ்க்கு மாற தயாராக இருக்க வேண்டும்.
கேம் டிசைன், அனிமேஷன், வீடியோ/ஆடியோ எடிட்டிங் , 3 டி அல்லது விர்சுவல் ரியாலிட்டி (விஆர்) உள்ளிட்டவை தெரிந்திருந்தால் பிளஸ் பாயிண்ட்டாகும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்கள் ஹைதராபாத், பெங்களூர், புனே உள்ளிட்ட 3 இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஜூலை 15ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 11.59 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வோர் போட்டோவுடன் கூடிய ரெஸ்யூம் வைத்திருக்க வேண்டும்.
இண்டர்வியூவுக்கு செல்லும்போது 10, பிளஸ்2, கல்லூரி படிப்புகளுக்கான மார்க்சீட் வைத்திருக்க வேண்டும். பார்ன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். அதில் பெயர்கள் சரியாக இருக்க வேண்டும். பிறந்ததேதி, பெயர்கள் உள்ளிட்டவை பார்ன்கார்டு மற்றும் சான்றிதழில் சரியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications